பொது செய்தி

இந்தியா

யோகா செய்யலாம்: புகை, மதுவுக்கு தடை: கொரோனாவிலிருந்து மீண்டவர்களுக்கு அறிவுரை

Updated : செப் 13, 2020 | Added : செப் 13, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
யோகா , புகை, மது, தடை, கொரோனா,அறிவுரை,New Protocols,  Patients, Recovery, Covid19, Chyawanprash, yoga suggestions, health ministry, post-Covidcare, management, guidelines

புதுடில்லி : கொரோனாவில் இருந்து மீண்டவர்கள், அதற்கு பின் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:
* கொரோனா தொற்றுக்கு சிகிச்சைக்கு பின் குணமடைந்து வீடு திரும்பியவர்கள், உடல்வலி, அசதி, இருமல் உள்ளிட்டவை குறித்து தகவல் தெரிவிக்க வேண்டும்.

*கொரோனாவில் மீண்டு வீடு திரும்பியவர்கள், முகமூடி அணிவதுடன், அடிக்கடி கைகளை குழுவ வேண்டும். சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும்


latest tamil news
*வீட்டு பணிகளை படிப்படியாக துவங்கலாம். அலுவலக பணிகளை படிப்படியாக துவங்கலாம்.

*வீட்டில் உடல் வெப்ப நிலை மற்றும் ரத்த அழுத்தத்தை அடிக்கடி பரிசோதனை செய்வதுடன், பல்ஸ் ஆக்சிமூட்டர் மூலம் ஆக்சிஜன் அளவையும் பரிசோதனை செய்ய வேண்டும்.

*நீரழிவு நோயாளிகள், ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அடிக்கடி பரிசோதித்து கொள்ள வேண்டும்.

*அவ்வப்போது சுடுநீரை பருக வேண்டும்.

*மிதமான உடற்பயிற்சி செய்யலாம்.

*சீரான சத்துள்ள உணவுகளை சாப்பிடலாம். குறிப்பாக அவ்வப்போது, சமைக்கப்பட்ட சூடான எளிதில் செரிக்கக்கூடிய உணவுகளை உண்ணலாம்


latest tamil news


Advertisement


latest tamil newslatest tamil newslatest tamil news*போதுமான தூக்கம் இருக்கும் வகையில் பார்த்து கொள்ள வேண்டும்

*மது குடிப்பது, புகைப்பழக்கத்தை தவிர்க்க வேண்டும்.

*தொடர்ந்து வறட்டு இருமல், தொண்டை கட்டு போன்றவை இருந்தால், ஆயுஷ் அல்லது அலோபதி டாக்டர்களின் ஆலோசனைப்படி மருந்துகள் எடுக்கலாம். ஆயுஷ் மூலிகை பொடிகள் மூலம் நீராவி பிடிக்கலாம். தொண்டையில் நீர் படுமாறு வாய் கொப்பளிக்கலாம்

*நாள்தோறும் காலையில் இளம் சுடுநீர் அல்லது பாலில் சவன்பிராஷ் மருந்தை கலக்கி பருகலாம். கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் சவன்பிராஷ் மருந்தை சாப்பிடுவது ஆயுஷ் மருத்துவர்களால் ஏற்று கொள்ளப்பட்டுள்ளது.

*கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் தங்களின் அனுபவங்களை உறவினர்களிடமும், நண்பர்களிடமும் பகிர்ந்து சாதகமான சூழல்களை உருவாக்கி நம்பிக்கை ஏற்படுத்தலாம். சமூக வலைதளத்திலும், கொரோனா அனுபவங்களை விளக்கி எழுதி சமூகத்தில் நம்பிக்கையை ஏற்படுத்தலாம்

*கொரோனாவில் இருந்து குணமடைந்த பின் ஏதேனும் உதவி தேவைப்பட்டால், சுய உதவிக்குழுக்கள், தகுதியான டாக்டர்கள், மனநல பயிற்சியாளர்கள் ஆலோசனைகளை உதவிகளை பெறலாம்.

*சமூக விலகலை பின்பற்றி , நண்பர்களுடன் யோகா, பிராணயாமம், மூச்சுப்பயிற்சி போன்றவற்றை செய்யலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
meenakshisundaram - bangalore,இந்தியா
14-செப்-202004:52:17 IST Report Abuse
meenakshisundaram நோ நோ -தமிழகத்தில் மட்டும் இதற்கு விலக்கு ,அடலீஸ்ட் இந்த தடவையாவது தரணும் ,தமிழ் நோயாளிகள் நேரே வைத்திய சாலையிலிருந்து கொண்டு 'டாஸ்மாக் 'செல்ல அனுமதி வேண்டும் ,அதுவே சமூக நீதி ,சில தலைமுரைகளாக அவர்கள் குடித்து பழகியதை எந்த சக்தியும் தடுப்பது ஒதுக்கீடு கொள்கைக்கு முரணானது ??
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X