பொது செய்தி

இந்தியா

எய்ம்ஸும்... அமித்ஷாவும்... - டுவிட்டரில் டிரண்டிங்

Updated : செப் 14, 2020 | Added : செப் 13, 2020 | கருத்துகள் (23)
Share
Advertisement
AIIMS, Amitshah, Nehru

புதுடில்லி : மருத்துவ பரிசோதனைக்காக மத்திய அமைச்சர் அமித்ஷா டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதை வைத்து டுவிட்டரில் #-AIIMS, #AmitShah, #Nehru என்ற ஹேஷ்டாக்குகள் டிரண்ட்டாகி வருகின்றன.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு கடந்த ஆக., 2ம் தேதி கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வந்த நிலையில் ஆக., 14ல் அவர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தார். இந்நிலையில் பார்லிமென்ட் கூட்டத்தில் பங்கேற்பதற்கு முன்பாக உடல்நிலை பற்றி அறிய மருத்துவ பரிசோதனைக்காக டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அவர் மீண்டும் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால் அமித்ஷாவிற்கு மீண்டும் கொரோனா என்பது போன்று செய்திகள் ஒரு பக்கம் பரவின. ஆனால் வழக்கமான உடல் பரிசோதனை என எய்ம்ஸ் மருத்துவமனை தெரிவித்தது.


latest tamil news




இதற்கிடையே #AIIMS, #AmitShah, #Nehru என்ற ஹேஷ்டாக் காலை முதலே சமூகவலைதளங்களில் டிரண்ட் ஆகின. நாட்டிற்கு எது முக்கிய தேவை என்பதை அந்தக்காலத்திலேயே மறைந்த முன்னாள் பிரதமர் நேரு அறிந்து, எய்ம்ஸ் மருத்துவமனையை நிறுவினார். இப்போது அதில் தான் பா.ஜ.,வினர் சிகிச்சை பெறுகின்றனர் என குறிப்பிட்டு காங்கிரஸ் ஆதரவாளர்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர். மேலும் மக்களுக்கு எய்ம்ஸ், ஐஐடி., போன்றவையே முதன்மையான தேவையாக உள்ளது. அதை அதிகமாக நிறுவுங்கள், நேருவிடமிருந்து கற்றுக் கொள்ளுங்கள் என கருத்துக்களை பதிவிட்டு #AIIMS, #Nehru-ஐ டிரெண்ட் செய்தனர்.


latest tamil news




இந்நிலையில் மருத்துவ பரிசோதனை தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா வெளிநாடு சென்றுள்ளார். அவருடன் ராகுலும் பயணித்துள்ளார். இதனால் பார்லிமென்ட்டின் முதல் கூட்டத்தில் இவர்கள் பங்கேற்க மாட்டார்கள் என தெரிகிறது. இதை சுட்டிக்காட்டி பா.ஜ.வினர் பதிலடி கொடுத்து வருகின்றனர். ''நேரு கட்டியது தானே ஏய்ம்ஸ், ஐஐடி. பின் எதற்காக சோனியா இங்கு சிகிச்சை பெறாமல், ராகுல் இங்கு படிக்காமல் வெளிநாடு சென்றனர். ஒருவேளை நேரு கட்டியதால் என்பதால் புறக்கணிக்கிறார்களோ என விமர்சித்து வருகிறார்கள்.

இப்படி இவர்கள் மாறி மாறி கருத்து பதிவிட்டு வருவதன் எதிரொலியாக #AIIMS, #AmitShah, #Nehru ஆகிய ஹேஷ்டாக் டுவிட்டரில் டாப் டிரெண்டிங்கில் உள்ளது. #AIIMS ஹேஷ்டாக்கை 60 ஆயித்திற்கும் அதிகமானோரும், #AmitShah ஹேஷ்டாக்கை 20 ஆயிரத்திற்கும் அதிகமானபேரும், #Nehru ஹேஷ்டாக்கை 26 ஆயிரத்திற்கு அதிகமான பேரும் ரீ-டுவீட் செய்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sivagiri - chennai,இந்தியா
14-செப்-202012:57:42 IST Report Abuse
Sivagiri எதோ பாவம் தனது குடும்பத்துக்காக அப்போது அரசு பணத்தில் கட்டினார் . . . பிற்காலத்தில் இவர்கள் வருவார்கள் என்று தெரிந்தால் கட்டியிருக்க மாட்டார் . . .
Rate this:
Cancel
சத்யமேவ ஜெயதே - Ahmadabad,இந்தியா
14-செப்-202011:49:50 IST Report Abuse
சத்யமேவ ஜெயதே இந்த பொய்யான காந்தி பெயரை சுமந்து கொண்டு இருக்கும் கான் குடும்பமான சொனியா குடும்பத்தை நம்பி ஒட்டு போடும் இந்தியர்களை சொல்லுங்கள்.
Rate this:
Cancel
Vivekanandan Mahalingam - chennai,இந்தியா
14-செப்-202011:04:48 IST Report Abuse
Vivekanandan Mahalingam இத்தாலிய சோனியா க்கு பண வசதி அதிகமா இருக்கிறதால வெளிநாடு வைத்தியம் . இந்தியனுக்கு ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X