பொது செய்தி

இந்தியா

30 ஆண்டுகளாக கால்வாய் தோண்டி பாசன வசதி செய்த தனி ஒருவர்!

Updated : செப் 13, 2020 | Added : செப் 13, 2020 | கருத்துகள் (20)
Share
Advertisement
கால்வாய், பீஹார், தனி ஒருவர்,

பாட்னா: பீகார் மாநிலத்தில் தனி ஒரு விவசாயி, மலைகளிலிருந்து விழும் நீரை கிராமத்து வயல்வெளிகளுக்கு திருப்ப, 30 ஆண்டுகளாக 3 கி.மீ நீளம் கொண்ட கால்வாயை வெட்டியுள்ளார். அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

பீகார் மாநிலம் கயா மாவட்டத்திலுள்ளது கோதிலவா கிராமம். கயா மாவட்ட தலைநகரிலிருந்து 80 கி.மீ தூரத்தில் உள்ள இந்த கிராமம், அடர்ந்த காடு மற்றும் மலைகளால் சூழப்பட்டுள்ளது. மாவோயிஸ்டுகளின் அடைக்கல பகுதியாகவும் இந்த ஊர் பார்க்கப்படுகிறது. இங்குள்ள மக்களின் முக்கிய வாழ்வாதாரமாக விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு உள்ளது.


latest tamil news


இந்த கிராமத்தைச் சேர்ந்த முதிய விவசாயி லாங்கி பூயன் செய்த அளப்பறிய பணியால், மாநில வரைபடத்திலேயே இல்லாத இவ்வூர் தேசிய அளவில் செய்திகளில் இடம்பெற தொடங்கியுள்ளது.

அங்குள்ள விளைநிலங்களுக்கு முறையான பாசன வசதி இல்லாமல் இருந்தது. அதே சமயம் மழைக்காலங்களில், மலைகளில் இருந்து விழும் நீர் முழுவதுமாக ஆற்றில் பாய்ந்தது. இதனை பார்த்த லாங்கி பூயன் கால்வாய் ஒன்றை வெட்டி தண்ணீரை கிராமத்து குளத்திற்கு திருப்பும் பணியில் இறங்கினார்.


latest tamil news30 ஆண்டுகளுக்கு முன் இந்த பணியை அவர் தொடங்கிய போது யாரும் அவருக்கு உதவ முன் வரவில்லை. இதை செய்து முடிக்க முடியாது என கூறியுள்ளனர். ஆனால் தினமும் கால்நடைகளை ஓட்டிச்சென்று அப்பகுதியில் மேய்ச்சலுக்கு விட்டு விட்டு, சிறிது சிறிதாக கால்வாய் வெட்ட தொடங்கினார். தற்போது 3 கி.மீ நீள கால்வாயை குளத்துடன் இணைத்துவிட்டார்.

'இந்த காலக்கட்டத்தில் எத்தையோ பேர் பிழைப்பு தேடி நகரங்களுக்கு மாறிவிட்டனர். ஆனால் நான் இங்கேயே இருக்க முடிவு செய்தேன்' என்கிறார் லாங்கி பூயன்.


latest tamil newsதற்போது அவர் வெட்டிய கால்வாயினால், குளம் நீர் நிரம்பி காணப்படுகிறது. இதனால் ஏராளமான வயல்கள் பாசன வசதி பெறும், விலங்குகள் பயனடையும் என்கின்றனர் உள்ளூர் மக்கள். இச்செயலால் அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. சமூக ஊடகங்களிலும் இச்செய்தி அனைவராலும் பகிரப்படுகிறது.

Advertisement
வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kumzi ( இந்துமத விரோதி சுடலை கான் வேணாம் போடா ) திருடுவதையே கொள்கையாக கொண்ட திமுக, இந்துமத விரோதி சுடலை கான் திருந்துவதற்கு வாய்ப்பே இல்லை
Rate this:
Cancel
baala - coimbatore,இந்தியா
14-செப்-202010:26:29 IST Report Abuse
baala அடுத்தவர்களை குறை சொல்லி கருத்து எழுதுவது அபத்தம். நாம் என்ன செய்து இருக்கிறேன், நாம் ஒழுங்கா/யோக்கியமா நேர்மை நம்மிடம் இருக்கிறதா அடுத்தவர்களின் பணத்தை நாம் ஒருபோதும் எடுத்ததில்லையா என்று நிதானமாக யோசித்தால் தெரியும். அப்படி இல்லாதவர்கள் மட்டுமே அடுத்தவர்களை சாட தகுதி நாம் அடுத்தவர்களுக்கு உபயோகமாக எப்போதாவது இருந்தது உண்டா/ நாம் மனிதாபிமானபோது நடந்து இருக்கிறோமா என்று சுய பரிசோதனை செய்தல் நலம்
Rate this:
Cancel
nallavan - manigramam,பஹ்ரைன்
13-செப்-202023:40:51 IST Report Abuse
nallavan நீங்கள் மனிதர் அல்ல தெய்வம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X