'கங்கனாவுக்கு ஆதரவளிப்பது நாட்டின் துரதிர்ஷ்டம்:' சஞ்சய் ராவத் கொதிப்பு

Updated : செப் 13, 2020 | Added : செப் 13, 2020 | கருத்துகள் (44)
Share
Advertisement

மும்பை: 'மும்பையை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் என, அவமானப்படுத்திய நடிகை கங்கனாவுக்கு ஆதரவாக, பா.ஜ., இருப்பது துரதிர்ஷ்டமானது' என, சிவசேனா மூத்த தலைவரும் எம்.பி.,யுமான சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.


latest tamil news



நடிகர் சுஷாந்த் தற்கொலை விவகாரத்தில் நடிகை கங்கனா ரனாவத்தை மும்பையைப் பற்றியும், மகாராஷ்டிரா மாநிலம் குறித்தும் அவதூறாகப் பேசினார். மும்பையை 'மினி பாகிஸ்தான்' என்றார். 'இதற்கு கங்கனா மன்னிப்புக் கோர வேண்டும். மன்னிப்புக் கேட்காவிட்டால், மும்பைக்கு வரக்கூடாது' என, சிவசேனா எம்.பி., சஞ்சய் ராவத் எச்சரித்தார். இதனால், கங்கனாவுக்கும் மகாராஷ்டிராவில் ஆளும் சிவசேனா கட்சிக்கும் இடையில் மோதல் வெடித்தது.



latest tamil news



கங்கனாவின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக இமாச்சல் அரசு, அவருக்கு பாதுகாப்பு வழங்கக் கோரியது. இதையடுத்து அவருக்கு, 'ஒய் பிளஸ்' பாதுகாப்பை மத்திய அரசு வழங்கியுள்ளது. இதற்கு சிவசேனா தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்தச் சூழலில் பா.ஜ., மூத்த தலைவரும் முன்னாள் முதல்வருமான தேவேந்திரபட்நாவிஸ், 'மகாராஷ்டிரா அரசு கங்கனா விவகாரத்தில் கவனம் செலுத்துவதை விட, கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதில் கவனம் செலுத்தலாம்' எனத் தெரிவித்திருந்தார்.


latest tamil news



இதற்கு பதிலளிக்கும் வகையில், சிவசேனாவின் அதிகாரபூர்வ நாளேடான சாம்னாவில் சஞ்சய் ராவத், 'சுஷாந்த் சிங் வழக்கில் கங்கனாவின் நிலைப்பாட்டுக்கு பா.ஜ., ஆதரவு அளித்து வருகிறது. இது பிஹாரில் அடுத்த சில மாதங்களில் நடக்க இருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் உயர் சாதிப் பிரிவினரான ராஜ்புத், சத்ரியர்களின் வாக்குகளைப் பெறுவதற்கும், தேர்தலில் வெற்றி பெறவும் பா.ஜ., எடுக்கும் முயற்சியாகும். பா.ஜ.,வில் உள்ள மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு தலைவர் கூட மாநிலம் அவமானப் படுத்தப்பட்டபோது வருத்தம் தெரிவிக்கவில்லை. நடிகை கங்கனா, முதல்வர் உத்தவ் தாக்கரேவை அவமானப்படுத்தினாலும், மாநிலத்தின் மக்கள் எந்த எதிர்வினையையும் ஆற்றக்கூடாதா. கங்கனாவுக்கு ஆதரவாக பா.ஜ., இருப்பது துரதிர்ஷ்டமானது' என, எழுதியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (44)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rafi - Riyadh,சவுதி அரேபியா
14-செப்-202017:21:27 IST Report Abuse
Rafi ஒரு மாநிலத்தை அவமதித்த நடிகைக்கு விசாரணை வளையத்திற்குள் கொண்டுவராமல், y + பாதுகாப்பு கொடுத்து மக்களின் பணம் விரயம் ஆக்கியதும் துரதிஷ்டம்
Rate this:
Cancel
Hari - chennai,இந்தியா
14-செப்-202013:23:21 IST Report Abuse
Hari என்ன சார் சொல்றீங்க, கங்கண ஒன்னும் ராஜ்தாக்கரே , இம்ரான்கான் போல என சொல்லவில்லையே நிறுத்திக் கொள்ளுங்கள் உங்கள் அரசின் செயல்பாடுகளை, அதை விடுத்தது கங்கனா வீடு இடிக்கப்படுவது எப்படி இருக்குன்னா, முன்பு கருணாதியை எதிர்த்து பேசிய டி ராஜேந்தரின் வீட்டை கருணாநிதியின் பேச்சைக்கேட்டு சென்னை மெட்ரோ அதிகாரிகள் (குண்டர்கள்) புல்டோசர் கொண்டு இடித்தார்கள் அதையே இப்போது காங்கிரசின் குண்டர்களின் கும்மல் கங்கண வீட்டில் செய்கிறது ஆக எங்கு மக்கள் விரோத செயல் நடந்தாலும் முன்னோடியாக இருப்பது சர்க்காரியா ஊழல் கருணாநிதிதான் என்பது, தான் மண்ணிற்குள் போனாலும் பூமியில் நிலைத்து நிற்கிறது.
Rate this:
Cancel
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
14-செப்-202011:47:35 IST Report Abuse
Malick Raja நாளைய பாதுகாப்பு அமைச்சராக கூட கங்கானாவை ஆக்குவார்கள் .. அறிவார்ந்த பிஜேபியினர் என்பது தெளிவு
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X