மாணவர்களின் உயிருடன் ஸ்டாலின் விளையாட கூடாது : முருகன்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

மாணவர்களின் உயிருடன் ஸ்டாலின் விளையாட கூடாது : முருகன்

Updated : செப் 13, 2020 | Added : செப் 13, 2020 | கருத்துகள் (35)
Share
மாணவர், ஸ்டாலின், திருப்பூர், பா.ஜ.,  முருகன், ஸ்டாலின் , எல்.முருகன், D.M.K, M.K.Stalin, Stalin, தி.மு.க,

திருப்பூர் : ''தி.மு.க., தலைவர் ஸ்டாலின் மாணவர்களின் உயிருடன் விளையாட கூடாது,'' என்று திருப்பூரில் பா.ஜ., மாநில தலைவர் முருகன் தெரிவித்தார்.

திருப்பூர் வடக்கு மாவட்ட பா.ஜ., செயற்குழு கூட்டம், திருப்பூர் பூலுவபட்டியில் நடந்தது. இதில், பா.ஜ., மாநிங தலைவர் முருகன் பங்கேற்றார்.

முன்னதாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தி.மு.க., தலைவர் ஸ்டாலின் எல்லா விஷயங்களிலும் அரசியல் செய்ய கூடாது. மாணவர்களின் உயிருடன் மற்றும் உணர்வுகளோடு ஸ்டாலின் விளையாட கூடாது. தேர்வு பயம் தொடர்பாக அரசு சார்பில் மாணவர்களுக்கு கவுன்சிலிங் வழங்க வேண்டும். மாணவர்களின் உணர்வுகளை தவறாக திசை திருப்பவும், அவர்களை பயமுறுத்த அரசியல் செய்ய கூடாது.
நீட் தேர்வு என்பது சுப்ரீம் கோர்ட் வரை சென்று, தீர்ப்பின் அடிப்படையில் நாடு முழுவதும் நடக்கிறது. தமிழகத்தில் புதிதாக, 11 மருத்துவ கல்லுாரி வந்துள்ளது. தமிழக மாணவர்களுக்கு வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. நீட் தேர்வு தொடர்பாக, மாநில அரசு கொண்டு வந்திருக்கும். 10 சதவீதம் உள் இட ஒதுக்கீட்டை நாங்கள் வரவேற்கிறோம். துரித நடவடிக்கை எடுத்து, சட்டத்தை அமல்படுத்த வேண்டும்.


latest tamil news



அனைத்து தனியார் பள்ளிகளை போல, அரசு பள்ளி மாணவர்களும் ஹிந்தி கற்று கொள்ள வேண்டும். எங்கள் நிலைப்பாடு மும்மொழி கொள்கையை அமல்படுத்த வேண்டும் என்பது தான். பா.ஜ., 2016 ல், 75 இடங்களில் வெற்றி தோல்வியை நிர்ணயித்தது. அதனடிப்படையில், தற்போது, 60 இடங்களில் வெற்றி பெறுவோம் என கூறினோம்.இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில், 'தமிழாய்ந்த தமிழன்டா; எம்மொழியும் கற்பேன்டா; தடுக்க நீ யாரடா' என, தி.மு.க.,வுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், மும்மொழிக்கு ஆதரவாக டீ சர்ட்டை முருகன் வெளியிட்டார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X