பொது செய்தி

இந்தியா

இந்தியாவில் தடுப்பூசி பரிசோதனை: அனுமதிக்காக காத்திருக்கும் 'சீரம்' நிறுவனம்

Updated : செப் 13, 2020 | Added : செப் 13, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

புனே: ஆக்ஸ்போர்டு - அஸ்ட்ராசெனகா தடுப்பூசியை மீண்டும் பரிசோதிக்க பிரிட்டன் அனுமதி அளித்துள்ள நிலையில், இந்தியாவின் அனுமதிக்காக சீரம் நிறுவனம் காத்திருக்கிறது.



latest tamil news



இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு மற்றும் ஸ்வீடனின் அஸ்ட்ராசெனகா நிறுவனத்தின் தடுப்பூசி மூன்றாம் கட்ட ஆய்வில் இருந்தது. முதலிரண்டு பரிசோதனைகளை வெற்றிகரமாக முடித்த தடுப்பூசி, நோய் தடுப்பாற்றலை அதிகரித்தது. மூன்றாம் கட்ட பரிசோதனை பரவலாக பல்லாயிரக்கணக்கான மக்களிடம் செய்யப்படுகிறது.

இங்கிலாந்தில் தடுப்பூசி பெற்ற ஒருவருக்கு புதிய நோய் உண்டாகி உடல்நலம் குன்றியது. இதனால் கடந்த வாரம் பரிசோதனை நிறுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து பாதுகாப்பு தகவல்களை அரசு குழு ஆய்வு செய்தது. அவர்கள், 'ஆக்ஸ்போர்டு - அஸ்ட்ராசெனகா நிறுவன தடுப்பூசி பாதுகாப்பு பிரச்னைகள் கொண்டிருக்கவில்லை' என, விளக்கம் அளித்தனர். அதை ஏற்று, இங்கிலாந்து மருந்து மற்றும் சுகாதார ஒழுங்குமுறை ஆணையம் பரிசோதனையை மீண்டும் துவக்க அனுமதித்துள்ளது.


latest tamil news



இந்தியாவில் ஆக்ஸ்போர்டு - அஸ்ட்ராசெனகாவுடன் இணைந்து சீரம் இந்தியா நிறுவனம் தடுப்பூசியை தயாரிக்க ஒப்பந்தம் போட்டுள்ளது. தமிழகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆக்ஸ்போர்டு தடுப்பூசியை சீரம் இந்தியா நிறுவனம் பரிசோதித்து வந்தது. இங்கிலாந்தில் பின்னடைவு ஏற்பட்டதால் பாதுகாப்பு கருதி இந்தியாவிலும் பரிசோதனைகள் நிறுத்தப்பட்டன.



latest tamil news



தற்போது இங்கிலாந்தில் பரிசோதனைகளை மீண்டும் துவங்க அனுமதி கிடைத்துள்ளதால், இந்திய பொது மருந்து கட்டுப்பாட்டாளரின் அனுமதிக்காக சீரம் நிறுவனம் காத்திருக்கிறது. அவர்கள் அனுமதி தந்தவுடன் இந்தியாவிலும் மீண்டும் ஆக்ஸ்போர்டு தடுப்பூசி பரிசோதனை துவங்கவுள்ளதாக சீரம் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vena Suna - Coimbatore,இந்தியா
13-செப்-202023:16:23 IST Report Abuse
Vena Suna பரிசோதனை ஆரம்பிக்க அனுமதியா? பரிசோதனை செய்து அது அனுமதிக்கப் பட்டு,முடிவுகள் வந்து,எல்லோருக்கும் வர இரண்டு ஆண்டுகள் ஆகும்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X