பொது செய்தி

தமிழ்நாடு

பட்டப்பகலில் ஒருவர் கொலை: ஏழு பேர் கொண்ட கும்பலிடம் விசாரணை

Updated : செப் 13, 2020 | Added : செப் 13, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement

கோவை: முன் விரோதம் காரணமாக சோடா கடை உரிமையாளரை ஏழு பேர் கொண்ட கும்பல் வெட்டிக் கொன்றது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.



latest tamil news



கோவை நரசிம்மநாயக்கன்பாளையத்தை சேர்ந்த ஆறுமுகத்தின் மகன் நிதிஷ்குமார், 20. இவருக்கும் கோவை ராம்நகரை சேர்ந்த விஜய் மற்றும் ஆனந்த் ஆகிய சகோதரர்கள் தவறாக பேசியுள்ளனர். இதையடுத்து, நிதிஷ்குமாரின் தந்தை மற்றும் உறவினர்கள் விஜய், ஆனந்த் வீட்டுக்கு சென்று தகராறில் ஈடுபட்டனர். இதுகுறித்த வழக்கில் நிதிஷ்குமார் கைது செய்யப்பட்டார்.


latest tamil news



கடந்த சில தினங்களுக்கு முன் நிதிஷ்குமார் ஜாமினில் வெளியேவந்தார். இதை அறிந்த விஜய், ஆனந்தின் நண்பர்கள் இருவர், நிதிஷ்குமாரை கத்தியால் குத்தினர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த சாய்பாபா காலனி போலீசார் இருவரிடமும் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், நிதிஷ்குமாரின் தந்தை, கோவை மாநகர மத்திய போலீஸ் உதவி கமிஷனரிடம், நிதிஷ்குமார் மீது தாக்குதல் நடத்த கோவை ராம்நகரை சேர்ந்த, சோடா கடை உரிமையாளரான பிஜூ, 40, என்பவர் தான் காரணம் என புகார் அளித்தனர்.



latest tamil news



இந்நிலையில், நிதிஷ்குமாரின் நண்பர்கள் ஏழு பேர் கொண்ட குழு, கோவை காந்திபுரம் அருகே, பிஜூவை ஆயுதங்களால் கடுமையாக தாக்கினர். இதில் படுகாயமடைந்த பிஜூவை அருகிலிருந்தவர்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து காட்டூர் போலீசார், கண்காணிப்பு கேமிராக்களில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் ஏழு பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
வெகுளி - Maatuthaavani,இந்தியா
13-செப்-202020:21:39 IST Report Abuse
வெகுளி என்னது, தாக்கப்பட்டவர் இறந்து விட்டாரா? எங்கே ஸ்டாலின்? எங்கேஒரு கோடி?...
Rate this:
Cancel
வெகுளி - Maatuthaavani,இந்தியா
13-செப்-202020:21:02 IST Report Abuse
வெகுளி தமிழர்களிடமே கொலை விசாரணையா? .... எங்கே கல்யாணசுந்தரம்? எங்கே சீமான்?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X