பொது செய்தி

தமிழ்நாடு

நீட் தேர்வு எப்படி: மாணவர்கள் கருத்து

Updated : செப் 13, 2020 | Added : செப் 13, 2020 | கருத்துகள் (13)
Share
Advertisement
நீட் தேர்வு, கோவை, சூலூர், மாணவர்கள்,

சென்னை: தேர்வு எளிமையாக இருந்ததாக, பாடத்திட்டத்தில் இருந்து கேள்வி கேட்கப்பட்டதாக தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள் தெரிவித்துள்ளனர். நீலகிரி மாவட்ட மாணவர்கள் கேள்வித்தாள் கடினமாக இருந்தது என தெரிவித்தனர்.

கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்ட நீட் தேர்வு, இன்று(செப்., 13) நாடு முழுவதும் நடந்தது. தமிழகத்தில் 14 நகரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டன. 1.17 லட்சம் பேர் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். காலை 11 மணி முதல் மாணவர்கள் தேர்வு மையத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். அதற்கு முன்னர் பல பரிசோதனைகள் நடத்தப்பட்டன. மதியம் 2: 00 மணிக்கு துவங்கிய தேர்வு மாலை 5:00 மணிக்கு நிறைவு பெற்றது.


latest tamil newsசென்னையில், தேர்வு எழுதிய சில மாணவர்கள் கூறும் போது, வினாத்தாள் எளிமையாக இருந்தது. பாடத்திட்டத்தில் இருந்தே கேள்விகள் கேட்கப்பட்டதாக தெரிவித்தனர்.

சில பாடங்களில் கேள்விகள் சற்று கடினமாகவும், சில பகுதிகளில் சிறப்பாகவும் இருந்ததாக தெரிவித்தனர். உயிரியலில் 5-7 கேள்விகள் கடினமாக இருந்தன. வேதியியலில் எப்போதும் இல்லாத வகையில் கேள்விகள் சுலபமாக இருந்தன. இயற்பியல் பிரிவில் கேள்விகள் கடினமாக இருந்தன என தெரிவித்தனர்.

சென்னையை சேர்ந்த மற்றொரு மாணவர் கூறுகையில், நன்றாக படித்திருந்தால் தேர்ச்சி பெற்றுவிடலாம். மிகவும் கடினமாக இருந்தது எனக்கூற முடியாத அளவுக்கு எழுதும் அளவிற்கு இருந்தது என தெரிவித்தார்.


கோவை மாணவர்கள் பேட்டிlatest tamil newsநீட் தேர்வுக்கு வீட்டில் இருந்தே தான் படித்தேன். இதற்கென, தனியாக 'கோச்சிங் கிளாஸ்'களுக்கு எல்லாம் எங்கும் செல்லவில்லை. முதல் முறையாக இந்த தேர்வு எழுதியது புதிய அனுபவமாக இருந்தது. நல்ல முறையில் தேர்வு எழுதியுள்ளேன்.
- நித்யஸ்ரீ, மாணவி, கோவை

நீட் தேர்வுக்கென, 11ம் வகுப்பு படிக்கும் போதே தனியாக பயிற்சி பெற்றேன். பின்னர், பிளஸ்2 வந்த பிறகு, வீட்டில் இருந்தேதான் படித்தேன். நீட் தேர்வு வேண்டும், வேண்டாம் என்று சொல்வதை விட, எந்த சூழலாக இருந்தாலும் மன உறுதியுடன் இருந்து சிறப்பான பங்களிப்பை தரவேண்டும் என்பது எனது கருத்து.
- அனிதா, மாணவி, கோவை

தேர்வு மையத்திற்குள் நுழைந்தது முதல் தேர்வு எழுதிவிட்டு வெளியில் வரும் வரை, தனி நபர் இடைவெளி கடைபிடிக்கப்பட்டது. மேலும், தேர்வு எழுதுவோருக்கு பிரத்யேகமாக முக கவசங்கள் வழங்கப்பட்டன. ஆரம்பத்தில், சானிட்டைசர் கொண்டு செல்ல அனுமதிக்கவில்லை, பின்னர் மாணவர்களின் நலன் கருதி, சானிட்டைசர் கொண்டு செல்ல அனுமதி வழங்கப்பட்டது. என்னால் முடிந்த வரை, நல்ல முறையில் தேர்வு எழுதியுள்ளேன்.
- மெர்லின், மாணவி, கோவை

நீட் தேர்வு கட்டாயம் தேவை. சமச்சீர் பாடத்திட்டத்தில் தான் பயின்றேன். பிளஸ் 2 வில், குறைந்த மதிப்பெண் பெரும் மாணவர்களுக்கு மருத்துவ கனவை நீட் தேர்வு பூர்த்தி செய்யும். பொதுப்பிரிவினருக்கு கட்டணம் குறைக்கப்பட்டுள்ளதால், நீட் தேர்வு பெரிதும் உதவும். என்னை பொறுத்தவரை நீட் தேர்வு பிரச்னை இல்லை.
- வர்ணா, மாணவி, கோவை

சமச்சீர் பாடத்திட்டத்தில் பயின்ற எனக்கு தேர்வு மிகவும் எளிதாக இருந்தது. நீட் தேர்வு கட்டாயம் அவசியம் தேவை. சமச்சீர் பாடத்திட்டத்தில் பயின்றவர்கள் மனப்பாடம் செய்து தான் தேர்வு எழுதுவர் என்ற கருத்து நிலவுகிறது. அப்படியில்லை என்பதை நிரூபிக்க நீட் உதவுகிறது. இந்த தேர்வு மூலம் தான் மருத்துவ கனவு நனவாகும். இயற்பியல் பாடத்தில் கேட்கப்பட்ட கேள்விகள் சற்று கடினமாக இருந்தன.
- மோனல், கோவை


நீலகிரி மாணவர்களுக்கு கடினம்:


நீலகிரி மாவட்டத்தில், மொத்தம், 77 பேர் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர். இங்கு தேர்வு மையம் இல்லாததால், கோவை, திருப்பூர் உட்பட பிற மாவட்டங்களில் உள்ள தேர்வுமையங்களுக்கு சென்றுள்ளனர்.

ஊட்டியை சேர்ந்த பயஸ் என்ற மாணவர் கூறுகையில், ஊட்டியில் நீட் கோச்சிங் சென்டர் இல்லை. கொரோனா காரணமாக , கோவை கோச்சிங் சென்டருக்கு செல்லமுடியவில்லை. எனினும் ஆன்லைனில் படித்து தேர்வு எழுதினேன். பிசிக்ஸ் , கெமிஸ்ட்ரியில் கேள்விகள் டிவிஸ்ட் செய்வதாக இருந்தது. சற்று கஷ்டம் தான். பரவாயில்லை. மீண்டும் அடுத்த முறை பயிற்சி எடுத்து எழுதுவேன். இந்த தேர்வுக்காக தற்கொலை செய்வதை மாணவர்கள் தவிர்க்க வேண்டும். இங்கு வாழ ஆயிரம் வழிகள் உள்ளன. என்றார்.என தெரிவித்தனர்.


latest tamil news
திருப்பூர்:


திருப்பூரில் முதன்முறையாக, வித்யாசாகர் பள்ளியில், நீட் மையம் அமைக்கப்பட்டது. இம்மையத்தில், 1,080 பேர் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்ட நிலையில், 921 பேர் எழுதினர்.இவர்களில், அரசு பள்ளிகளை சேர்ந்த 140 பேர் தேர்வு எழுதி உள்ளனர்.159 பேர் தேர்வு எழுதவில்லை.எந்தவிதமான இடையூறு இன்றி தேர்வு சுமூகமாக நிறைவடைந்தது


தேர்வு தாமதம்


இந்நிலையில், கோவை மாவட்டம் சூலூரில் எல் அன்ட் டி பைபாஸ் சாலையில் உள்ள தனியார் பள்ளியில் தேர்வு மையம் அமைக்கப்பட்டிருந்தது. இங்கு தேர்வு எழுதிய 50 பேருக்கு வினாத்தாள் தவறாக கொடுக்கப்பட்டது. இதனால், அதிர்ச்சியடைந்த மாணவர்கள், கண்காணிப்பாளர்களிடம் தகவல் தெரிவித்தனர். பின்னர் கேள்வித்தாள் சரி செய்யப்பட்டு, மாலை 4:30 மணிக்கு தேர்வு துவங்கியது. இரவு 7 : 30 மணி வரை தேர்வு நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவையை பொறுத்தவரை தேர்வு அமைதியாக நடந்தது. மேட்டுப்பாளையத்தில் மட்டும், தேர்வில் பங்கேற்க வரும் மாணவர்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை மீறி சிலர் தேர்வு எழுத வந்தனர். அதனை சரி செய்யும்படி கண்காணிப்பாளர்கள் தெரிவித்தனர். இதனால், தங்களுக்கு மன உளைச்சல் ஏற்பட்டதாக பெற்றோர்கள் குற்றம்சாட்டினர்.
பொள்ளாச்சி

பொள்ளாச்சி ஜமின்முத்தூரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் நீட் தேர்வு நடைபெற்றது. இதில் கோவை, ஈரோடு திருப்பூர், நீலகிரி மாவட்டங்களை சேர்ந்த மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். 660 மாணவர்களில் சுமார் 253 மாணவிகளும் 165 மாணவர்களும் தேர்வில் பங்கேற்றனர். தேர்வு எழுதிய மாணவர்கள் கூறுகையில் கடந்த 2019ம் ஆண்டை போன்று தேர்வு எளிமையாக இருந்தது .இயற்பியல் பாட கேள்விகள் மட்டும் யோசிப்பதாக அமைந்தது. மேலும் கெமிஸ்ட்ரி, பயாலஜி போன்ற பாடங்கள் எளிதாக இருந்தன. நீட் தற்கொலை குறித்து மாணவர்கள் கூறுகையில் தற்கொலை தீர்வல்ல என்றனர்.

Advertisement
வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Yaro Oruvan - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்
15-செப்-202013:48:21 IST Report Abuse
Yaro Oruvan தமிழகத்தில் லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் நீட் தேர்வு எழுதி உள்ளனர்.. நீட் தேர்வு நடத்துவதில் தங்கள் திருப்தியையும் தெரிவித்துள்ளனர்.. ஆனால் இந்த சுடலை & கோ திராவிஷ க்ரூப் மற்றும் கான்+கிராஸ் கும்பல், இந்த ஒரு லட்சம் பேரை விட்டுவிட்டு தற்கொலை செய்துகொண்ட மூன்று பேரின் மரணத்தை மட்டுமே வைத்து அரசியல் செய்வார்கள்.. பெற்றோர்களே உங்கள் பிள்ளைகள் வாழ்வில் நல்ல கல்வி பெறவேண்டும் என நினைத்தால் தீயமுகவையும் கான்+கிராஸையும் ஒதுக்குங்கள்.. செய்வீர்கள் என நம்புகிறோம்.. ஜைஹிந்..
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
14-செப்-202022:11:00 IST Report Abuse
sankaseshan வெற்றிரியும் தோல்வியும் வாழ்வில் மாரி மாரி வரும் , போகும் தன்னம்பிக்கை ,விடாமுயற்சி முக்கியம் .தேர்வு எழுதிய மாணவர்க்கு வெற்றிபெற வாழ்த்துக்கள் . அரசியல் வியாபாரிகளிடம் ஏமாற வேண்டாம் . ,
Rate this:
Cancel
pattikkaattaan - Muscat,ஓமன்
14-செப்-202014:16:43 IST Report Abuse
pattikkaattaan போட்டி என்று ஒன்று வந்தால், மனதை ஒருநிலைப்படுத்தி அதற்க்கு அணைத்து வழிகளிலும் உங்களை தயார்ப்படுத்துங்கள் . தேர்வின் முடிவு "தோல்வி" என்றாலும் தளர்ந்துவிடாதீர்கள் .. அது உங்களுக்கு நல்ல அனுபவத்தை கொடுத்திருக்கும் .. அடுத்த முறை இன்னும் பலத்துடன் மோதலாம்.. இது முடிவல்ல , ஆரம்பம் என்றே நினையுங்கள் கண்மணிகளே .. தோல்வியை கண்டு துவளும் எவனும் வாழ்க்கையில் வெல்லமுடியாது .. தேர்வு எழுதிய அனைவரும் மருத்துவர் ஆகிவிடமுடியாது .. மருத்துவ இடம் கிடைக்காவிட்டால் , வாழ்க்கை ஒன்றும் அழிந்துவிடாது .. வாழ்க்கையில் வெற்றிபெற எத்தனையோ படிப்புகள் இருக்கின்றன .. அடுத்த துறையை தேர்வுசெய்து வாழ்க்கையை வெல்லுங்கள் .. பெற்றோர்களே உங்கள் குழந்தை மதிப்பெண் குறைவாக பெற்றுவிட்டாலும் , தட்டிக்கொடுத்து ஆதரவாக இருங்கள்.. குறிப்பாக மற்ற உறவினர்கள் உங்கள் குழந்தைகளை கேவலமாக பேசாமல் பாதுகாத்துக்கொள்ளுங்கள் .. அது மிகவும் முக்கியம் .. நாங்கள் அனுபவித்திருக்கிறோம் .. என் மகளுக்கு அரசு மருத்துவ கல்லூரியில் இடம் கிடைக்கவில்லை , தனியார் கல்லூரியில் கிடைக்கும் நிலை ஏற்பட்டது .. என் மகள், அது வேண்டாம் என்று அரசு தொழில்நுட்ப கல்லூரியில் B.TECH படித்து , MS வெளிநாட்டில் படித்து , மிக உயர்ந்த சம்பளத்தில் உடனே வேலையும் கிடைத்துவிட்டது ... கல்வி கடனை கட்ட ஆரம்பித்துவிட்டோம் .. இந்த உலகம் பெரியது , அதில் பிழைக்க ஆயிரம் வழிகள் உள்ளன .. முயற்சி செய்யுங்கள்..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X