ஆஸியில் கொரோனா ஊரடங்கை எதிர்த்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

Updated : செப் 13, 2020 | Added : செப் 13, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
australia, corona, lockdown, protest,ஆஸ்திரேலியா, கொரோனா, ஊரடங்கு, ஆர்ப்பாட்டம்

மெல்பர்ன்: ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் கொரோனா ஊரடங்கை கண்டித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அந்நாட்டில் விக்டோரியா மாகாணத்தில் கொரோனா பாதிப்பு மற்ற பகுதிகளை காட்டிலும் அதிகம் உள்ளது. இதனால் அங்கு கடந்த 6 வாரங்களாக கொரோனா ஊரடங்கு கடுமையாக்கப்பட்டது. இந்நிலையில் மெல்பர்ன் நகரில் ஊரடங்கினை தளர்த்த வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நகரின் மையப்பகுதியில் போராட்டக்காரர்கள் போலீசார் மீது பழங்களை வீசி எறிந்தனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 74 பேரை போலீசார் கைது செய்தனர். கொரோனா பாதுகாப்பு விதிகளை மீறிய 176 பேரிடம் போலீசார் அபராதம் வசூலித்தனர். ஆர்ப்பாட்டக்காரர்கள் ஊரடங்கை தளர்த்துவதற்கு போராடுவதால் பொதுமக்கள் உயிருடன் விளையாடுவதாக போலீசார் தெரிவித்தனர்.


latest tamil news



இதுவரை ஆஸியில் 26,651 பேர் கொரோனாவால் பாதிப்பு அடைந்துள்ளனர். மொத்தம் 810 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். ஆகஸ்ட் மாத ஆரம்பத்தில் தினசரி பாதிப்பு 700 ஆக இருந்த நிலையில் தற்போது பாதிப்பு வெகுவாக குறைந்து விட்டது. கடந்த 24 மணி நேரத்தில் ஆஸியில் 44 பேர் கொரோனாவால் பாதிப்பு அடைந்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajesh - Chennai,இந்தியா
14-செப்-202020:01:41 IST Report Abuse
Rajesh வாழைப்பழம் மற்றும் ஆப்பிள் ஒரு கிலோ ஒரு ஆஸி டாலர்தான் அதாவது INR53 இந்தியாவில் மட்டும் ஏன் இந்த கொள்ளை?
Rate this:
Cancel
Sanny - sydney,ஆஸ்திரேலியா
13-செப்-202019:49:14 IST Report Abuse
Sanny ஊரடங்கு சட்டத்தை அறியாதவர்கள், முதன் முதலில் ஊரடங்கை வாழ்வில் சந்தித்தவர்கள். மனதால் அவர்களால் சகித்துக்கொள்ள முடியல.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X