பொது செய்தி

இந்தியா

2021 முதல் காலாண்டிற்குள் கோவிட் 19 க்கான மருந்து : மத்திய சுகாதார அமைச்சர்

Updated : செப் 13, 2020 | Added : செப் 13, 2020
Share
Advertisement

புதுடில்லி: 2021-ம் ஆண்டின் முதல் காலாண்டிற்குள் கோவிட் 19-க்கான மருந்து அறிமுகப்படுத்தப்படும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்து உள்ளார்.



latest tamil news




இது குறித்து அவர் கூறி இருப்பதாவது: கோவிட்-19 மருந்து அறிமுகப்படுத்துவதற்கான தேதி இன்னும் நிர்ணயிக்கப்படவில்லை. அடுத்த ஆண்டு முதல் காலாண்டில் இது தயாராக இருக்கலாம். தடுப்பூசி மருந்துகளை தனி மனிதர்களிடம் சோதனை நடத்துவதில் அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தடுப்பூசி பாதுகாப்பு , செலவு, தேவை, உற்பத்திக்கான காலக்கெடு போன்றவை குறித்து தீவிரமாக ஆலோசிக்கப்படுகிறது.

இந்தியாவில் பல தடுப்பூசி சோதனைகள் நடந்து வருகிறது. அது குறித்து தற்போது எதையும் கணிக்க முடியாது. சோதனை முடிவுகள் சரியாக இருக்கும் பட்சத்தில் எந்த ஒரு நிமிடத்தையும் வீணாக்காமல் உற்பத்தி துவக்கப்படும். வரும் 2021-ம் ஆண்டு முதல் காலாண்டிற்குள் அறிமுகப்படுத்தப்படும். தடுப்பூசி தயாரானால் அது மிகவும் தேவைப்படுபவர்களுக்கு கிடைக்கும்.


latest tamil news



தற்போது சோதனை நடைபெற்று வருகிறது. தேவைப்பட்டால் முதல் சோதனை மருந்தை நானே மகிழ்ச்சியுடன் எடுத்துக்கொள்வேன் என கூறினார். தொடர்ந்து அவர் தடுப்பூசியின் விலை குறித்து குறி்ப்பிட்ட போது மிகவும் தேவைப்படுபவர்களுக்கு அவர்களின் வாங்கும் திறனை பொருட்படுத்தாமல் கிடைக்க செய்ய மத்திய அரசு உறுதி அளிக்கும் என கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X