சுவாமி அக்னிவேஷ் இறந்தது நல்லது: முன்னாள் சிபிஐ தலைவர் சர்ச்சை கருத்து| Dinamalar

'சுவாமி அக்னிவேஷ் இறந்தது நல்லது': முன்னாள் சிபிஐ தலைவர் சர்ச்சை கருத்து

Updated : செப் 13, 2020 | Added : செப் 13, 2020 | கருத்துகள் (18)
Share
IPS officer, Nageswara Rao, Swami Agnivesh

புதுடில்லி: சமூக ஆர்வலரும், ஆர்ய சமாஜம் தலைவருமான அக்னிவேஷ் இறந்தது நல்லது என்றும், எமராஜன் இவ்வளவு நாள் ஏன் காத்திருந்தார் எனவும் சிபிஐ முன்னாள் தலைவர் நாகேஷ்வர ராவ் பதிவிட்டிருந்ததை டுவிட்டர் நீக்கியுள்ளது.

கடந்த வெள்ளியன்று தனது 80-வது வயதில் சமூக ஆர்வலர் அக்னிவேஷ் காலமானார். அவரது இறப்புக்கு தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்திருந்தனர். 1970களில் ஆரிய சமாஜ் அமைப்பின் கொள்கைகளை பின்பற்றி ஆரிய சபா என்ற தனிக்கட்சியை தொடங்கியவர் சுவாமி அக்னிவேஷ். ஹரியானா மாநில அமைச்சராகவும் பொறுப்பு வகித்துள்ளார். கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு, பெண் சிசு கொலை ஒழிப்பு போன்றவற்றுக்காக இவர் பணியாற்றியுள்ளார். இவரை சுற்றி சர்ச்சைகளும் அதிகம் இருந்தன.

2005-ல் பூரி ஜெகன்நாதர் ஆலயத்தில் இந்துக்கள் அல்லாதவர்களும் அனுமதிக்கப்பட வேண்டும் என கூறினார். இதனால் அவர் உருவ பொம்மையை எரித்து கோயில் அர்ச்சகர்கள் போராட்டம் நடத்தினர். 2011-ல், அமர்நாத் பனி லிங்கத்தை, வெறும் பனிக்கட்டி மட்டுமே என கூறி அமர்நாத் யாத்திரையை எதிர்த்தார். அவரது கருத்துக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது. 2018-ல் ஜார்கண்டில் பா.ஜ., இளைஞரணியினர், இந்துக்களுக்கு எதிரானவர் என கூறி அவர் மீது தாக்குதல் நடத்தினர்.


latest tamil newsஇந்த நிலையில் அவரது மறைவு குறித்து சி.பி.ஐ., முன்னாள் இடைக்கால தலைவரும், ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ்., அதிகாரியுமான நாகேஷ்வர ராவ் டுவிட்டரில் தெரிவித்த கருத்து சர்ச்சையாகியுள்ளது. தனிநபரை இழிவுபடுத்தும் வகையில் உள்ளதாக அந்த பதிவை டுவிட்டர் நீக்கியுள்ளது. அந்த டுவீட்டில் நாகேஷ்வர ராவ் கூறியிருந்ததாவது: நீங்கள் இறந்ததே நல்லது. காவி உடையுடன் இந்து மதத்திற்கு பெரும் சேதம் செய்தீர்கள். நீங்கள் ஒரு தெலுங்கு பிராமணராக பிறந்ததற்கு நான் வெட்கப்படுகிறேன். பசுத்தோல் போர்த்திய புலி. எமராஜன் ஏன் இவ்வளவு நாள் காத்திருந்தார் என்பது தான் எனக்கு அவரிடம் உள்ள குறை. இவ்வாறு பதிவிட்டிருந்தார்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X