மஹாராஷ்டிரா மீது அவதூறு ஏற்படுத்த சதி: உத்தவ் தாக்கரே

Updated : செப் 13, 2020 | Added : செப் 13, 2020 | கருத்துகள் (8)
Share
Advertisement
Maharashtra, Uddhav Thackeray, Uddhav

மும்பை: மஹாராஷ்டிரா மீது அவதூறு ஏற்படுத்த சதி நடந்து வருகிறது என அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்தார்.

நாட்டில் அதிக கொரோனா பாதிப்புக்குளான மாநிலமாக மஹா., உள்ளது. மஹா., அரசு கொரோனா பரவலை கட்டுப்படுத்த தவறி விட்டதாக அம்மாநில பா.ஜ., குற்றம்சாட்டி வருகிறது. மஹா., அரசு மீது, நடிகை கங்கனா ரணாவத்தும், தற்போது தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார்.

இந்நிலையில், உத்தவ் தாக்கரே டிவி பேட்டியில் பேசியதாவது: எந்தவிதமான அரசியல் புயலையும் எதிர்கொள்ள நான் தயார். கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாநில அரசு தொடர்ந்து போராடி வருகிறது. சிவசேனா அரசுக்கு எதிராக நடக்கும் அரசியல் சூழ்ச்சிகளை எதிர்த்து போராடுவோம். நான் இதுவரை மவுனமாக இருந்ததற்கு என்னிடம் பதில் இல்லை என்பது அர்த்தம் இல்லை.


latest tamil news



மஹா.,வில் தற்போது கிராமங்களிலும் கொரோனா பரவி வருகிறது. கொரோனாவிலிருந்து குணமடைபவர்கள் தற்போது அதிகரித்து வருகின்றனர். கொரோனாவை மக்கள் எளிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம். மக்கள் ஆதரவு இல்லாமல் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடியாது. மாஸ்க், சானிடைசர் பயன்படுத்துவது அவசியம். கொரோனா பரவலை கட்டுப்படுத்த மஹா., அரசின் திட்டமான 'மிஷன் பிகின் அகைன்' திட்டத்தை அவமானப்படுத்த சதி நடக்கிறது.

மராத்திய மக்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா கடந்த ஆண்டு சட்டசபையில், நிறைவேற்றப்பட்டது. இருப்பினும் சுப்ரீம் கோர்ட் இதற்கு தடை விதித்துள்ளது எதிர்பாராதது. கொரோனா காலத்தில் இதற்காக மராத்திய அமைப்புகள் போராட்டம் நடத்த வேண்டாம். இதற்காக அரசு தொடர்ந்து போராடும். பா.ஜ.,வும் இதற்கு ஆதரவு தருவதாக பட்னாவிஸ் தெரிவித்துள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Muruga Vel - Mumbai,இந்தியா
15-செப்-202006:12:23 IST Report Abuse
 Muruga Vel இவங்க ஆட்டம் முடிவுக்கு வர போகுது ..
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
14-செப்-202021:55:58 IST Report Abuse
sankaseshan அவதூறு இவராகவே ஏற்படுதி கொண்டதுபிறரை குற்றம் சொல்ல இவருக்கு தகுதி இல்லைதன்வினை தன்னை சுடும்ஆமாம் இவருடைய ஹிந்துத்வ நெற்றி திலகம் எங்கே ?அணி மாறினதும் ஆள் மாறிவிட்டார் .
Rate this:
Cancel
mathimandhiri - chennai,இந்தியா
14-செப்-202016:12:54 IST Report Abuse
mathimandhiri உங்க கூ.........ட்டணித் தலைகள் உங்களுக்கு வழங்கிய பாராட்டுப் பாத்திரத்தை அப்படியே சேனல் காரர்களுக்கு ஏன் காட்டல? எதிர் கட்சி எதையாவது சொல்லட்டுமே? ஏன் கவலைப் படணும்? விரக்தி
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X