வழக்குகளை காணொளியில் விசாரிக்க 94 சதவீத டில்லி உயர்நீதிமன்ற வக்கீல்கள் விருப்பம்

Updated : செப் 13, 2020 | Added : செப் 13, 2020
Share
Advertisement
delhi highcourt, 94 percent advocates, virtual hearings, desire, டில்லி உயர்நீதிமன்றம், 94 சதவீதம், வக்கீல்கள், காணொளி, விசாரணை, விருப்பம்

புதுடில்லி: வழக்குகளை காணொளியில் விசாரிக்க 94 சதவீத டில்லி உயர்நீதி மன்ற வக்கீல்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

கொரோனா ஊரடங்கு தளர்வை தொடர்ந்து கடந்த 1ம் தேதி முதல் டில்லி உயர்நீதிமன்றம் மற்றும் இதர நீதிமன்றங்களில் வழக்கமான விசாரணை நடைமுறை அமலுக்கு வந்துள்ளது.

ஆனால், கொரோனா அச்சம் காரணமாக கடந்த 1 முதல் 10ம் தேதி வரை 13 சதவீத வக்கீல்கள் மட்டுமே நீதிமன்றத்திற்கு வந்தனர். இதனால், பெரும்பாலான வக்கீல்கள் காணொளி மூலமே வழக்குகளை விசாரிக்க விரும்புவதாக தெரிகிறது. இத்தகவல் நீதிமன்ற பதிவாளர் அலுவலகத்தில் தெரிவிக்கப்பட்ட பின் நீதிமன்ற விசாரணை அறைகளை 5ல் 3ஆக டில்லி உயர்நீதிமன்றம் குறைத்துள்ளது.


latest tamil news



அதேபோல் டில்லி நகர நீதிமன்றங்களிலும் கடந்த 10 நாட்களாக 13 சதவீத வக்கீல்கள் மட்டுமே நீதிமன்றங்களுக்கு வந்தனர். ஆனால், உச்சநீதிமன்றத்தில் ஆகஸ்ட் மாத நிலவரப்படி சுமார் ஒரு சதவீத வக்கீல்கள் மட்டுமே நேரடி விசாரணைக்கு வந்ததாக கூறப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X