பொது செய்தி

தமிழ்நாடு

திருநெல்வேலியில் 'நீட்' தேர்வு தாலியை கழற்றி கொடுத்த மாணவி

Added : செப் 13, 2020 | கருத்துகள் (5)
Share
Advertisement
 திருநெல்வேலியில் 'நீட்' தேர்வு தாலியை கழற்றி கொடுத்த மாணவி

திருநெல்வேலி:திருநெல்வேலியில் நடந்த, 'நீட்' தேர்வில், 1,228 பேர், 'ஆப்சென்ட்' ஆகினர். மாணவி ஒருவர் தாலி செயின், மெட்டி ஆகியவற்றை கழற்றியபின் தேர்வறைக்குள் அனுமதிக்கப்பட்டார்.

திருநெல்வேலி மாவட்டத்தில், 20 மையங்களில் , 'நீட்' தேர்வு நடந்தது. திருமணம் ஆன வாசுதேவநல்லுாரை சேர்ந்த முத்துலட்சுமி, ஜான்ஸ் பள்ளியில் தேர்வு எழுத வந்தார்.

தாலி, மெட்டி அணிந்திருந்ததால் தேர்வறைக்குள் அனுமதிக்கப்படவில்லை. அதன்பின் தாலி, மெட்டி உள்ளிட்டவற்றை கழற்றி, குடும்பத்தினரிடம் கொடுத்துவிட்டு தேர்வறைக்கு சென்றார்.

உடல்நிலை பாதிக்கப்பட்ட கழுகுமலை மாணவி சுஜி, புஷ்பலதா பள்ளியில் தேர்வு எழுதினார். தேர்வு துவங்கிய சற்று நேரத்தில் மயக்கம் அடைந்ததால், திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 20 மையங்களில், 7,461 மாணவ, மாணவிகள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டிருந்தனர். 1,228 பேர் தேர்வு எழுத வரவில்லை.

Advertisement


வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Thirumurugan - Kuala Lumpur,மலேஷியா
17-செப்-202020:58:26 IST Report Abuse
Thirumurugan இந்த அளவுக்கு கெடுபிடிகள் வடமாநிலத்தில் இருக்கிறதா?
Rate this:
Cancel
RaajaRaja Cholan - Perungudi,சிங்கப்பூர்
15-செப்-202019:15:51 IST Report Abuse
RaajaRaja Cholan இது ஒரு செய்தியா ?. பிரசவத்தின் பொழுது , எக்ஸ் ரே எடுக்கும்பொழுது கழற்ற சொல்லுவார்களே ,அது ஏன் செய்தியில் வரவில்லை , ஒரு வெய்ட்டேஜ் பார்த்து முடிவு செய்யலாம் செய்தியா இல்லையா என்று
Rate this:
Cancel
R.PERUMAL SWAMY - doha,கத்தார்
15-செப்-202017:53:23 IST Report Abuse
R.PERUMAL SWAMY கடந்த ஆண்டு ஆள் மாறாட்டம் செய்து நீட் தேர்வு எழுதி பிடி பட்டவர்கள் எங்கு இருக்கிறார்கள் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X