பொது செய்தி

இந்தியா

பார்லி., மழைக்கால கூட்டத்தொடர் நாளை துவக்கம்; முக்கிய மசோதாக்கள் நிறைவேற்ற திட்டம்

Updated : செப் 13, 2020 | Added : செப் 13, 2020
Share
Advertisement
parliament, monsoon session, Amid Covid

புதுடில்லி: கொரோனா சூழலில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன், பார்லி., மழைக்கால கூட்டத்தொடர் நாளை(செப்.,14) துவங்குகிறது. இதில் முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

கொரோனா பரவல் காரணமாக பார்லி. பட்ஜெட் கூட்டத்தொடர் திட்டமிட்டதற்கு முன்பாகவே மார்ச் 23ல் முடிந்தது. அரசியல் சாசனப்படி ஆறு மாதத்துக்குள் பார்லி.யை மீண்டும் கூட்ட வேண்டும். கொரோனா பரவல் குறையாத நிலையில் பார்லிமென்ட் மழைக்கால கூட்டத் தொடரை கூட்டுவது பற்றி லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா ராஜ்யசபா தலைவர் வெங்கையா நாயுடு தீவிர ஆலோசனை நடத்தினர்.

இதையடுத்து கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுடன் பார்லி. மழைக்கால கூட்டத் தொடரை நடத்த முடிவு செய்யப்பட்டது. இதன்படி நாளை (செப். 14) கூட்டத் தொடர் துவங்குகிறது. நாளை முதல், அக்.,1ம் தேதி வரை, தொடர்ந்து 18 நாட்கள் நடைபெறுகிறது. இதற்காக, பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகளை மத்திய அரசு செய்துள்ளது.

கூட்டத் தொடரில் பங்கேற்கும் எம்.பி.க்கள் அதிகாரிகள் மற்றும் ஊடகங்களை சேர்ந்தவர்கள் அனைவரும் கூட்டத்தொடர் துவங்குவதற்கு 72 மணி நேரத்துக்கு முன் கட்டாயமாக கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. எம்.பி.க்கள் உட்பட அவைரும் அணிவதற்காக முககவசங்கள் கையுறைகள் அதிகளவில் வாங்கப்பட்டுள்ளன.


latest tamil news



மேலும் பார்லி. வளாகத்தையும் அடிக்கடி சுத்தம் செய்யவும் கூட்டத்தொடரில் பங்கேற்பவர்கள் தங்கள் கைகளை சுத்தம் செய்து கொள்ளவும் கிருமிநாசினிகளும் வாங்கி குவிக்கப்பட்டுள்ளன. சமூக இடைவெளியை கடைப்பிக்கும் வகையில் பார்லி.யில் இருக்கைகள் போடப்பட்டுள்ளன.

கொரோனா சூழலைக் கருத்தில் கொண்டு, பார்லி., கூட்டம் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும், பின்னர் மாலை 3 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் நடக்கும். கூட்டத் தொடரில் கேள்வி நேரம் இல்லை. தனிநபர் மசோதாவும் இல்லை. கேள்வி நேரத்துக்குப் பிந்தைய நேரமும் கட்டுப்பாடுகளுடன் அனுமதிக்கப்படும் என்று மக்களவை, மாநிலங்களவைச் செயலாளர்கள் அறிவித்துள்ளனர்.

இதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. கூட்டத்தொடருக்கு முன்பாக வழக்கமாக நடைபெறும் அனைத்துக் கட்சிக் கூட்டம் இந்தமுறை நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு பதில், அலுவல் ஆய்வுக்குழு கூடி முடிவெடுக்கிறது. கூட்டத்தொடரில், அவசர சட்டத்தை மாற்ற கொண்டு வரப்படும் 11 மசோதாக்கள் உட்பட, 23 புதிய மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

வங்கி சீர்திருத்த சட்ட மசோதா மற்றும் வேளாண் தொடர்பான 3 மசோதாக்களை எதிர்கட்சிகள் கடுமையாக எதிர்க்கும் என காங்., கட்சி தெரிவித்துள்ளது. கொரோனா விவகாரம், லடாக்கில் சீன ராணுவத்துடன் மோதல், பொருளாதார வீழ்ச்சி, விமானநிலையங்கள் தனியார் மயம், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு வரைவு, சிறு குறு நடுத்தர நிறுவனங்கள் மூடப்பட்டது குறித்து பார்லி.,யில் விவாதிக்கப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X