பீஹார் அரசுக்கு மோடி பாராட்டு

Updated : செப் 15, 2020 | Added : செப் 13, 2020 | கருத்துகள் (10)
Share
Advertisement
 பீஹார் அரசு, மோடி ,பாராட்டு

புதுடில்லி:''கல்வி, தொழிலாளர், சுகாதாரம், வருமான வரி என, எந்தத் துறையை எடுத்துக் கொண்டாலும், நாட்டின் வளர்ச்சிக்கு பீஹாரின் பங்கு மிகப் பெரியதாகவே இருக்கும். '

'ஒரு சிறப்பான அரசு அமைந்துவிட்டால், மக்களுக்கு திட்டங்கள் தானாக சென்று சேரும் என்பதை, பீஹார் அரசு நிரூபித்துஉள்ளது,'' என, பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.


கூட்டணி அரசு



பீஹாரில், முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான, ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ., கூட்டணி அரசு அமைந்துள்ளது. மாநில சட்டசபைக்கு, அடுத்த சில மாதங்களில் தேர்தல் நடக்க உள்ளது. இந்த நிலையில், பெட்ரோலியத் துறை சார்பில், பீஹாரில், 900 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை, பிரதமர் நரேந்திர மோடி நேற்று துவக்கி வைத்தார்.'வீடியோ கான்பரன்ஸ்' முறையில் நடந்த இந்த நிகழ்ச்சியில், மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர், தர்மேந்திர பிரதான், பீஹார் முதல்வர், நிதிஷ் குமார், பா.ஜ.,வைச் சேர்ந்த துணை முதல்வர், சுஷில் குமார் மோடி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் பிரதமர், மோடி பேசியதாவது:பீஹார் உட்பட, நாடு முழுதும் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை, மத்திய பா.ஜ., கூட்டணி அரசு மேற்கொண்டு வருகிறது. மாநிலத்தில் சரியான அரசு இருந்தால், மத்திய அரசின் திட்டங்கள், மக்களை நேரடியாக சென்றடையும் என்பதை, கடந்த, 15 ஆண்டுகளாக, பீஹார் நாட்டுக்கு உணர்த்தி வருகிறது. ஒரு காலத்தில், சமூகத்தில் உயர்ந்த நிலையில் இருப்பவர்கள் மட்டுமே, சமையல், 'காஸ்' இணைப்பு வைத்திருக்க முடியும் என்ற நிலை இருந்தது. தற்போது அது, முழுமையாக மாறியுள்ளது.உஜ்வாலா திட்டத்தின் மூலம், பெண்களுக்கு மிகப் பெரிய அதிகாரம் கிடைத்துள்ளது.


பொருளாதார காரணம்

சமையல் செய்வதற்கு விறகு குச்சிகளை சேகரிக்க வேண்டிய நிலை அவர்களுக்கு இல்லை. சுவாசக் கோளாறு போன்றவை ஏற்படுவதும் தடுக்கப்பட்டுள்ளது.இந்தக் கொரோனா காலத்திலும், வீடுகளுக்கு 'காஸ்' சிலிண்டர்களை கொண்டு சேர்க்கும் தொழிலாளர்கள் பாராட்டுக்கு உரியவர்கள்.முன்பெல்லாம், ஒரு திட்டத்தின் துவக்க விழாவை, ஒரு தலைமுறை பார்க்கும். அந்த திட்டம் நிறைவேறி செயல்பாட்டுக்கு வருவதை, வேறொரு தலைமுறை தான் பார்க்க முடியும். ஆனால், தற்போது நிலைமை மாறியுள்ளது. திட்டங்களுக்கு அனுமதி, ஒப்புதல் அளிப்பது விரைந்து நடக்கிறது. அது நடைமுறைக்கு வருவதும் வேகப்படுத்தப்பட்டுள்ளது.

அரசியல் மற்றும் பொருளாதார காரணங்களுக்காக, பீஹார் உட்பட, நாட்டின் கிழக்கு பகுதியில் உள்ள மாநிலங்களில் திட்டங்களை செயல்படுவதற்கு, முன்னர் ஆர்வம் காட்டப்படாமல் இருந்தது. அதை மாற்றியுள்ளோம். கல்வி, தொழிலாளர், சுகாதாரம், வருமான வரி என, எந்தத் துறையை எடுத்துக் கொண்டாலும், நாட்டின் வளர்ச்சியில், பீஹாரின் பங்கு மிகப் பெரியதாக உள்ளது.மாநிலத்தின் வளர்ச்சிக்கு, முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் பாராட்டப்பட வேண்டியவை.இவ்வாறு, அவர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
வெற்றிக்கொடிகட்டு. - -மதராஸ்:-),இந்தியா
14-செப்-202015:45:26 IST Report Abuse
வெற்றிக்கொடிகட்டு. நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் நம் ராணுவ வீரர்கள் பின்னால் நிற்பார்கள். அவர்களை நாம் வணங்குவோம். ஆனால் மோடியின் கொள்கைகள் நடவடிக்கைகளுக்கு பின்னால் மக்கள் நிற்பார்களா என்றால் சந்தேகம்தான்”
Rate this:
Cancel
வெற்றிக்கொடிகட்டு. - -மதராஸ்:-),இந்தியா
14-செப்-202015:41:20 IST Report Abuse
வெற்றிக்கொடிகட்டு. இவர்கள் கூட்டணி ஆட்சிக்கு இவர்களே பாராட்டு
Rate this:
Cancel
Raman Muthuswamy - Bangalore,இந்தியா
14-செப்-202015:40:10 IST Report Abuse
Raman Muthuswamy நிதிஷ் குமாரை பாராட்ட மிகவும் பெரிய மனதும் .. உருவமும் வேண்டும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X