டில்லி சர்தார் படேல் கொரோனா சிகிச்சை மையத்தில் இதுவரை 2,454 பேர் தொற்றிலிருந்து மீண்டனர்

Updated : செப் 13, 2020 | Added : செப் 13, 2020 | |
Advertisement
புதுடில்லி: உலகின் மிகப்பெரிய கொரோனா சிகிச்சை மையமான சர்தார் படேல் கோவிட் சிகிச்சை மையத்திலிருந்து இதுவரை 2,452 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்தனர்.இந்தோ-திபெத் எல்லை போலீசாரால் நடத்தப்படும் கொரோனா சிகிச்சை மையத்தில் 10,000 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இது டில்லி ராதா சோமி சட்சாங், சட்டார்பூரில் இடம் பெற்றுள்ளது. ஜூலை 5ல் தொடங்கப்பட்ட இம்மையத்தில் அங்கு இதுவரை
delhi, sadha patel covid care center, 10,000 beds, world biggest, 2,454 recovered, டில்லி, சர்தார் படேல் கோவிட் சிகிச்சை மையம், 10,000 படுக்கைகள், 2,454 பேர், குணம்

புதுடில்லி: உலகின் மிகப்பெரிய கொரோனா சிகிச்சை மையமான சர்தார் படேல் கோவிட் சிகிச்சை மையத்திலிருந்து இதுவரை 2,452 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்தனர்.

இந்தோ-திபெத் எல்லை போலீசாரால் நடத்தப்படும் கொரோனா சிகிச்சை மையத்தில் 10,000 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இது டில்லி ராதா சோமி சட்சாங், சட்டார்பூரில் இடம் பெற்றுள்ளது. ஜூலை 5ல் தொடங்கப்பட்ட இம்மையத்தில் அங்கு இதுவரை மொத்தம் 3,921 கொரோனா நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர்.



latest tamil news



அவர்களில் இதுவரை மொத்தம் 2,454 பேர் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினர். சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டவர்களில் 78 வயது முதியவர் தான் மிக வயதானவர். இம்மையத்தில் கொரோனா பாதிப்புக்குள்ளான 17 நாள் குழந்தையும் சிகிச்சை பெற்றது.



மொத்த படுக்ககைகளின் எண்ணிக்கை 10 ஆயிரமாக இருந்தாலும் தேவைப்பட்டால் அதை 12 ஆயிரமாகவும் ஆக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இம்மையத்தில் 800 மருத்துவ பணயாளர்களும், 600 பாதுகாப்பு பணியாளர்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X