இனி பெற்றோர்களும், ஆசிரியர்களும் விழிப்புடன் இருக்க வேண்டும்: சூர்யா அறிக்கை

Updated : செப் 13, 2020 | Added : செப் 13, 2020 | கருத்துகள் (143) | |
Advertisement
சென்னை: 'நம் பிள்ளைகளின் தகுதியையும், திறனையும் வெறும் தேர்வுகள் தீர்மானிக்க அனுமதிக்கக்கூடாது, இனி பெற்றோர்களும், ஆசிரியர்களும் விழிப்புடன் இருக்க வேண்டும்' என நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.'நீட்' தேர்வு அச்சம் காரணமாக ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக, நேற்று ஒரே நாளில் 3 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனர். பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில், இன்று நீட் தேர்வு
Surya, slams, NEET exam, Actor Surya, நீட், சூர்யா

சென்னை: 'நம் பிள்ளைகளின் தகுதியையும், திறனையும் வெறும் தேர்வுகள் தீர்மானிக்க அனுமதிக்கக்கூடாது, இனி பெற்றோர்களும், ஆசிரியர்களும் விழிப்புடன் இருக்க வேண்டும்' என நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.

'நீட்' தேர்வு அச்சம் காரணமாக ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக, நேற்று ஒரே நாளில் 3 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனர். பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில், இன்று நீட் தேர்வு நடந்து முடிந்தது. நாடு முழுவதும் 3,842 மையங்களில் 15.97 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினர். தமிழகத்தில் 14 நகரங்களில், 238 தேர்வு மையங்களில், 1.17 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினர்.

இந்நிலையில் நடிகர் சூர்யா வெளியிட்டுள்ள அறிக்கை: நீட் தேர்வு பயத்தில் ஒரே நாளில் 3 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டது மனசாட்சியை உலுக்குகிறது. தேர்வெழுதப்போகும் மாணவர்களுக்கு வாழ்த்து சொல்வதற்கு பதிலாக ஆறுதல் சொல்வதை போல அவலம் எதுவுயில்லை. கொரோனா தொற்று போன்ற உயிர் அச்சம் மிகுந்த பேரிடர் காலத்தில் கூட மாணவர்கள் தேர்வெழுதி தங்கள் தகுதியை நிரூபிக்க நிர்பந்திக்கப்படுவது வேதனை அளிக்கிறது.

அனைவருக்கும் சமமான வாய்ப்புகளை உருவாக்கி தரவேண்டிய அரசாங்கம் ஏற்றத்தாழ்வை உருவாக்குகிற கல்வி முறையை சட்டமாக கொண்டு வருகிறது. ஏழை எளிய மாணவர்களின் நிதர்சனம் அறியாதவர்கள் கல்விக்கொள்கைகளை வகுக்கிறார்கள். கொரோனா அச்சத்தால் உயிருக்கு பயந்து வீடியோ கான்பிரன்ஸிங் மூலம் நீதி வழங்கும் நீதிமன்றம் மாணவர்களை அச்சமில்லாமல் போய் தேர்வு எழுத வேண்டும் என்று உத்தரவிடுகிறது.

தேர்வு பயத்தில் மாணவர் தற்கொலை என்ற செய்தி அதிகபட்சம் ஊடகங்களில் அன்றைக்கான விவாத பொருளாக மாறுகிறது. இறந்து போன மாணவர்களின் மரண வாக்குமூலத்தில் கூட எழுத்துப்பிழைகளை கண்டுபிடிக்கும் சாணக்கியர்கள் அனல் பறக்க விவாதிப்பார்கள்.


latest tamil newsநீட் போன்ற மனுநீதி தேர்வுகள் எங்கள் மாணவர்களின் வாய்ப்புகளை மட்டுமின்றி உயிர்களையும் பறிக்கிறது. அநீதியான தேர்வு முறைகளுக்கு தங்கள் பிள்ளைகளை வாரிக்கொடுத்துவிட்டு வாயிலும் வயிற்றுலும் அடித்து கொள்கிற பெற்றோர்களுக்கு இது வாழ்நாள் தண்டனையாக மாறுகிறது. இனி பெற்றோர்களும், ஆசிரியர்களுமே விழிப்புடன் இருக்க வேண்டும்.

நமது பிள்ளைகளின் தகுதியையும் திறனையும் வெறும் தேர்வுகள் தீர்மானிக்க அனுமதிக்ககூடாது. இந்த நியாயமற்ற தேர்வுகளுக்கு அவர்களைத்தயார்ப்படுத்த துணைநிற்பது போலவே, மாணவர்கள் வெற்றி தோல்விகளை எதிர்கொள்ளவும் தயார்படுத்த வேண்டும். அன்பு நிறைந்த குடும்பம், உறவு,நண்பர்கள் சூழ்ந்த அற்புதமான இந்த வாழ்விற்கு முன்பு தேர்வர்களின் முடிவுகள் அற்பமானது என்பதை உணர்த்துவது முக்கியம்.

மகாபாரத காலத்து துரோணர்கள் ஏகலைவன்களிடம் கட்டை விரலை மட்டுமே காணிக்கையாக கேட்டார்கள். நவீனகால துரோணர்கள் முன்னெச்சரிக்கையுடன் ஆறாம் வகுப்பு குழந்தைகூட தேர்வெழுதி தனது தகுதியை நிரூபிக்க வேண்டும் என்று கேட்கிறார்கள். இதையெல்லாம் கடந்து படித்து முன்னேறுகிறவர்களை பலியிட நீட் போன்ற வலிமையான ஆயுதங்களை வைத்திருக்கிறார்கள்.

ஒரேநாளில் நீட் தேர்வு மூன்று மாணவர்களை கொன்று இருக்கிறது, இன்று நடந்ததே நேற்றும் நடந்தது. இனி நாளையும் நடக்கும். நாம் விழிப்புடன் இல்லாமல் போனால் மீண்டும் நடந்து கொண்டே இருக்கும். அப்பாவி மாணவர்களின் மரணங்களை அமைதியாக வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கக்கூடாது. சாதாரண குடும்பத்து பிள்ளைகளின் மருத்துவர் கனவில் தீ வைக்கிற நீட் தேர்வுக்கு எதிராக ஒரு சமூகமாக நாம் ஒன்றிணைந்து குரல் எழுப்புவோம்... இவ்வாறு அவர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (143)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S.Ganesan - Hosur,இந்தியா
16-செப்-202023:25:20 IST Report Abuse
S.Ganesan யாரும் எதுவும் படிக்க வேண்டாம். பேசாமல் எல்லோருக்கும் சினிமாவில் கதாநாயகன் சான்ஸ் வாங்கி கொடுங்க சூர்யா. அவர்களும் சில பல கோடிகள் சம்பாதித்து வாழ்க்கையில் செட்டில் ஆகட்டும். முடியுமா ?
Rate this:
Cancel
samvijayv - Chennai,இந்தியா
16-செப்-202016:47:10 IST Report Abuse
samvijayv முதலில் உன் போன்றோரிடம்தான், ரசிகர்கள் மிகவும் விழுப்புணர்வுடன் இருக்கவும். நயவஞ்சகமான பேச்சு படத்தில் தான் பேசுவாய் இப்பொழுது மருத்துவத்தை பற்றி ஏதுனும் தெரியுமா? 595 மதிப்பெண் எடுப்பவன் எப்படி தகுதியுடைவன் ஒரு மருத்துவம் என்பது மற்றோரு கடவுள் சமமானவர்கள் அவர்களை வெறும் மதிப்பெண் மட்டும் போதுமா? மூடனே சிங்கத்தை சினிமாவில் வேட்டையாடலாம். நிஜத்தில் வெறும் வீரம் மட்டும் போதாது. சற்று மன வலிமையும், புத்தி கூர்மையும் வேண்டும்., பேச வேண்டியவை விவாதிக்க மக்கள் பிரசினைகள் இன்னும் எவ்வளவோ உண்டு. முதலில் ஒரு நாட்டு குடிமகனின் ஒருவனாக சிந்தித்துப் பார்.
Rate this:
Cancel
subramanian - coimbatore,இந்தியா
15-செப்-202017:59:32 IST Report Abuse
subramanian சூர்யா, உங்களின் ஆதங்கம் அர்த்தமற்றது. இங்கு எங்கு வந்தது மனுநீதியும்,ஏகலைவனும்?. இந்த நீட் ப்ரொபோஸ் பண்ணியது, கொண்டு வந்தது எல்லாமே டி எம் கே, அங்கம் வகித்த யு பி எ அரசாங்கம் நடந்த பொழுது. அப்போது நீங்கள் உங்கள் உணர்வுகளை எங்கு அடகு வைத்திருந்தீர்கள்? உங்களின் பொய் முகத்தை மீண்டும் மீண்டும் காண்பித்து உங்களை நீங்களே தரம் தாழ்த்திக்கொள்ளாதீர்கள். உங்களுக்கும் படிப்புக்கும் என்ன சம்பந்தம்? இது என்ன சினிமாவில் டூப் வைத்து சாகசம் செய்து ஏமாற்றும் விடயம் என நினைத்தீர்களா? யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுக்கு பட்டு. தென்னாடுடைய சிவன் என் நாட்டுக்கும் இறைவன் உங்களையும் உங்கள் குடும்பத்தாரையும் நல்வழிப்படுத்தி திருத்துவனாக. நமச்சிவாய வாழ்க
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X