பொது செய்தி

தமிழ்நாடு

மாமல்லபுரத்தில் சுற்றுலா அனுமதிக்கு எதிர்பார்ப்பு

Added : செப் 13, 2020
Share
Advertisement

மாமல்லபுரம் : மாமல்லபுரத்தில், பல்லவர் கால, தொல்லியல் சின்னங்கள் உள்ளன. இவற்றை காண, உள், வெளிநாட்டுப் பயணியர், சுற்றுலா வருகின்றனர்.

இப்பகுதியினரின் வாழ்வாதாரம், சுற்றுலாவை சார்ந்தே உள்ளது. கைவினைப் பொருட்கள் விற்பனை, உணவு, தேநீர், குளிர்பானம், நொறுக்குத் தீனிகள் விற்பனை, சுற்றுலா வழிகாட்டி, சிற்பக்கலை, ஆட்டோ ஓட்டுதல் உள்ளிட்ட தொழில்களில் ஈடுபட்டுள்ளனர்.கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு ஊரடங்கால், ஆறு மாதங்களாக, சிற்ப வளாகங்கள் மூடப்பட்டு, சுற்றுலா முடங்கி உள்ளது. இதனால், சுற்றுலா தொழில்களில் ஈடுபட்டுள்ளோர், வருவாய் இழந்து, பாதிக்கப்பட்டுஉள்ளனர்.

தற்போதைய தளர்வுகளால், விடுதிகள், ரெஸ்டாரென்ட்டுகள் இயங்கும் நிலையில், தமிழக அரசின், சுற்றுலா தடை நீடிக்கிறது.ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட பகுதிகளில், கட்டுப்பாடுகளுடன், சுற்றுலாவிற்கு, அரசு அனுமதித்துள்ள நிலையில், மாமல்லபுரம் பகுதி வாழ்வாதாரம் கருதி, சுற்றுலாவிற்கு அனுமதிக்க வேண் டும் என, இப்பகுதியினர், அரசிடம் வலியுறுத்துகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X