பொது செய்தி

தமிழ்நாடு

ஒரத்துார் ஊராட்சியில் உடைக்கப்பட்ட இரு ஏரிக்கரைகள் சரிசெய்யப்படுமா?

Added : செப் 13, 2020
Share
Advertisement

ஸ்ரீபெரும்புதுார் : ஒரத்துார் ஊராட்சியில், ஆக்கிரமிப்பாளர்களால் உடைக்கப்பட்ட அம்மணம்பாக்கம் மற்றும் நீலமங்கலம் ஏரிக்கரையை சீரமைக்க வேண்டும் என, விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

குன்றத்துார் ஒன்றியம், படப்பை அருகே, ஒரத்துார் ஊராட்சி உள்ளது. இங்குள்ள, நீலமங்கலம், அம்மணம்பாக்கம் கிராம ஏரி, குன்றத்துார் ஊராட்சி ஒன்றியத்தின் கட்டுப்பாட்டில் உள்ளன.நீலமங்கலம் ஏரி நீரை பயன்படுத்தி, 80 ஏக்கர் பரப்பிலும், அம்மணம்பாக்கம் ஏரியை பயன்படுத்தி, 50 ஏக்கர் பரப்பிலும் விவசாயம் செய்யப்படுகிறது.இந்த இரண்டு ஏரிகளையும் ஆக்கிரமித்து, ஏராளமான வீடுகள் கட்டப்பட்டுள்ளன.

ஏரியை ஆக்கிரமித்துள்ளோர், இரு ஏரிகளின் கரையை உடைத்துவிட்டதாக, குற்றச் சாட்டு எழுந்துள்ளது.இது குறித்து, விவசாயிகள் கூறியதாவதுநீலமங்கலம் ஏரி, அம்மணம்பாக்கம் ஏரியை ஆக்கிரமித்து வீடு கட்டியோருக்கு, ஒரத்துார் ஊராட்சி நிர்வாகம் சார்பில் சாலை, குடிநீர், மின்சார வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டு உள்ளன.

மழைக்காலத்தில், இரு ஏரிகளும் விரைவாக நிரம்பி விடும். இதனால், ஏரியை ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகளில் தண்ணீர் தேங்குவதால், ஆக்கிரமிப்பாளர்கள், 2017ல், நீலமங்கலம் ஏரிக்கரையை உடைத்து நீரை வெளியேற்றினர்.அதேபோல், அம்மணம்பாக்கம் ஏரிக்கரை, கடந்த ஆண்டு உடைத்து, ஏரி நீரை வெளியேற்றினர். உடைக்கப்பட்ட ஏரிக்கரைகள் இதுவரை சரிசெய்யப்படவில்லை. இதனால், மழை நீரை தேக்கி வைக்க முடியவில்லை.வடகிழக்கு பருவமழை துவங்க உள்ளதால், உடைந்த ஏரிக்கரைகளை, ஒன்றிய நிர்வாகத்தினர் சரிசெய்ய வேண்டும்.இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X