மணல் லாரிகளால் டூ - வீலர் ஓட்டிகள் அவதி

Added : செப் 13, 2020
Share
Advertisement

கடம்பத்துார் : கடம்பத்துார் ஒன்றியப் பகுதியில், தார்ப்பாய் போடாமல் செல்லும் சவுடு மணல் லாரிகளால், டூ - வீலரில் செல்லும் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

கடம்பத்துார் ஒன்றியம், ஏகாட்டூர் ஊராட்சியில், பொதுப்பணித் துறைக்கு சொந்தமான, 60 ஏக்கர் ஏகாட்டூர் ஏரி உள்ளது. இந்த ஏரி, இரண்டு முறை சவுடு மணல் அள்ள டெண்டர் விடப்பட்டு, பள்ளத்தாக்காக மாறியிருந்தது.இதையடுத்து, மூன்று மாதங்களுக்கு முன், பொதுப்பணித் துறை நீர்வள ஆதார துறையினர், 59.50 லட்சம் ரூபாய் மதிப்பில், குடிமராமத்து பணிகள் துவங்கி நடந்தது.

இந்நிலையில், மீண்டும் இந்த ஏரியில், சில தினங்களுக்கு முன், சவுடு மணல் அள்ள டெண்டர் விடப்பட்டு, மணல் அள்ளும் பணி நடந்து வருகிறது.இதையடுத்து, நேற்று, ஞாயிற்றுக்கிழமைகூட ஏரியில், சவுடு மணல் எடுக்கும் பணி நடந்து வருகிறது. இவ்வாறு சவுடு மணல் கொண்டு செல்லும் லாரிகள், தார்ப்பாய் போட்டு மூடாமல் செல்கின்றன.இதனால், டூ - வீலரில் செல்வோர் அவதிப்பட்டு வருகின்றனர். சில நேரங்களில், டூ - வீலரில் செல்பவர்கள் விபத்தில் சிக்கும் நிலையும் ஏற்படுகிறது.எனவே, தார்பாய் போடாமல் செல்லும் சவுடு மணல் லாரிகள் மீது, மாவட்ட நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X