சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பூட்டிய வீட்டில் 14 சவரன் திருட்டு

Added : செப் 13, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

தொடுகாடு : தொடுகாடு கிராமத்தில், வீட்டின் பூட்டை உடைத்து, 14 சவரன் தங்க நகைகள், 50 கிராம் வெள்ளி பொருட்கள் மற்றும், ஒரு லேப்டாப் திருடு போனது.

கடம்பத்துார் ஒன்றியம், தொடுகாடு கிராமம், ஸ்ரீநகரைச் சேர்ந்தவர் நடேசன் மகன் வெங்கடேசன், 39. தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் இவர், நேற்று முன்தினம் வீட்டை பூட்டி விட்டு காயமடைந்த மகனை அழைத்துக் கொண்டு, மருத்துவமனைக்கு சென்று விட்டு, மாலையில் வீடு திரும்பினார்.

அப்போது வீட்டின் முன்பக்கத்தில் உள்ள மெயின் கேட் பூட்டு மற்றும் கதவு உடைக்கப்பட்டிருந்ததை கண்டார். வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது, இரண்டு பீரோக்கள் உடைக்கப்பட்டு, அதிலிருந்த, 14 சவரன் தங்க நகைகள், 50 கிராம் வெள்ளி பொருட்கள் மற்றும், ஒரு லேப்டாப் திருடப்பட்டது தெரிந்தது. இது குறித்து, மப்பேடு போலீசில், வெங்கடேசன் அளித்த புகாரையடுத்து, போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
14-செப்-202015:41:57 IST Report Abuse
skv srinivasankrishnaveni போட்டுண்டுபோனாலும் கத்தியகாட்டிமிரட்டிபிடுங்குவானுக வீட்டுலே பூட்டிட்டுப்போனால் இப்பதி போநால்வரதுங்க எனக்கும் நான் ஜஸ்ட் 3மணிநேரம் போயிட்டுவந்தேன் என் நகைகள் கள்ளம் போச்சு இன்னிவரை கிடைக்கலே
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X