பொது செய்தி

தமிழ்நாடு

ஆக்கிரமிப்பில் இருந்த 45 ஏக்கர் நிலம் மீட்பு

Added : செப் 13, 2020
Share
Advertisement

பொன்னேரி : தனிநபர் ஆக்கிரமிப்பில் இருந்த, 45 ஏக்கர் மேய்க்கால் புறம்போக்கு நிலத்தினை வருவாய்த் துறையினர் மீட்டு, எல்லை கல் பதித்தனர்.

பொன்னேரி அடுத்த, இலுப்பாக்கம் கிராமத்தில் உள்ள, 45 ஏக்கர் பரப்பில், மேய்க்கால் புறம்போக்கு நிலத்தினை தனிநபர் சிலர் ஆக்கிரமித்து விவசாயம் செய்து வந்தனர்.பனப்பாக்கம், இலுப்பாக்கம், குமரஞ்சேரி உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த கால்நடைகள் மேய்ச்சல் இடம் இன்றி தவித்தன.இது குறித்து, கிராமவாசிகள், மாவட்ட நிர்வாகத்திடம் தொடர்ந்து புகார் தெரிவித்தும், ஆக்கிரமிப்புகளை அகற்றவும் வலியுறுத்தி வந்தனர்.

அதை தொடர்ந்து, ஆக்கிரமிப்பு நிலங்களில் நெல் பயிரிடப்பட்டு, தற்போது அறுவடை பணிகள் முடிந்து உள்ளன.அதை தொடர்ந்து, ஒரு வாரமாக வருவாய்த் துறையினர் மேற்கண்ட இடத்தினை அளவீடு செய்தனர்.அளவீடு செய்த இடங்களில், எல்லை கல் பதித்து ஆக்கிரமிப்பாளர்கள் பிடியில் இருந்த, 45 ஏக்கர் மேய்க்கால் நிலங்களை மீட்டு உள்ளனர்.மீண்டும் அங்கு தனிநபர்கள் ஆக்கிரமிப்பு செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராமவாசிகள் வலியுறுத்தி உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X