பொது செய்தி

தமிழ்நாடு

புரட்டாசி மாதம் எதிரொலியால் காசிமேடில் கரைபுரண்ட கூட்டம்

Added : செப் 13, 2020
Share
Advertisement
 புரட்டாசி மாதம் எதிரொலியால் காசிமேடில் கரைபுரண்ட கூட்டம்

காசிமேடு : புரட்டாசி மாத பிறப்புக்கு முந்தைய ஞாயிறு என்பதால், காசிமேடு மீன் சந்தையில், நேற்று கூட்டம் கரைபுரண்டது.

கொரோனா பரவலால், மார்ச், 24 முதல், ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவ்வப்போது, தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வந்தன. அதன்படி, ஜூலையில் இருந்து, காசிமேடு மீன் சந்தையில், மொத்த வியாபாரத்திற்கு அனுமதியளிக்கப்பட்டது.ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில், ஞாயிறு முழு ஊரடங்கு அமலானதால், சனிக்கிழமைகளில் கூட்டம் அலைமோதியது. செப்டம்பரில் ஞாயிறு ஊரடங்கு ரத்து செய்யப்பட்டது. அதன்படி, இரு வாரங்களாக ஞாயிற்றுக்கிழமைகளிலும், மீன் சந்தை செயல்படுகிறது.

சென்னையில், புரட்டாசி மாதம், பெருமாள் வழிபாடு காரணமாக, பலரும் அசைவ உணவுகளை தவிர்த்து விடுவது வழக்கம். காசிமேடு மீன் சந்தையும், காற்று வாங்கும். அந்த வகையில், வரும், 17ம் தேதி, புரட்டாசி மாதம் துவங்கவுள்ளது.அதன் எதிரொலியாக, ஆவணி மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையான நேற்று, காசிமேடு மீன் சந்தையில், வழக்கத்திற்கு மாறாக மக்கள் கூட்டம் கரைபுரண்டது.

அதிகாலை முதலே, களைகட்டிய மீன் விற்பனையில், திருக்கை, சங்கரா, மத்தி, தோல்பாறை, வஞ்சிரம் போன்ற பல வகை மீன்களின் வரத்து அதிகம் இருந்தன.வழக்கம் போல, வியாபாரிகள் சமூக இடைவெளியின்றி, முக கவசம் அணியாமல், மீன்களை ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர்.வரும், ஞாயிற்றுக்கிழமை, புரட்டாசி முதல் வாரம் என்பதால், காசிமேடு மீன் சந்தையில் கூட்டம் வெகுவாக குறையும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X