சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பிளாஸ்டிக் குடோனில் தீ; ஆவடி அருகே பரபரப்பு

Added : செப் 13, 2020
Share
Advertisement

ஆவடி : ஆவடி அருகே ஏற்பட்ட தீ விபத்தில், குடோனில் மறு சுழற்சிக்காக வைத்திருந்த பிளாஸ்டிக் கழிவுகள், தீயில் எரிந்து சாம்பலாகின.

ஆவடி அடுத்த அயப்பாக்கம், அபர்ணா நகரில், தனியார் நிறுவனத்திற்கான குடோன் உள்ளது. இங்கு, மறுசுழற்சிக்காக பிளாஸ்டிக், நைலான், அலுமினியம் உள்ளிட்ட, 40 டன் கழிவுப் பொருட்கள் சேகரித்து வைக்கப்பட்டிருந்தன.இந்த நிலையில், நேற்று அதிகாலை, 3:00 மணி அளவில், குடோனில் திடீரென தீ பிடித்தது. கொழுந்துவிட்டு எரிந்த தீயில், அங்கிருந்த பொருட்கள் அனைத்தும் நாசமாகின.

தகவல் அறிந்து, ஆவடி, அம்பத்துார், கோயம்பேடு ஆகிய நிலையங்களில் இருந்து, நான்கு தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள், தீ அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.காலை, 8:00 மணி அளவில், தீ முழுவதுமாக அணைக்கப்பட்டது. அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு ஏதும் இல்லை. இந்த விபத்து, மின் கசிவால் ஏற்பட்டதா அல்லது விஷமிகளால் ஏற்பட்டதா என, திருமுல்லைவாயல் போலீசார் விசாரிக்கின்றனர்.அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X