தமிழ்நாடு

'புகார்களை ஏற்பதில் காலதாமதம் கூடாது': சென்னை போலீஸ் கமிஷனர்

Added : செப் 13, 2020
Share
Advertisement
 'புகார்களை ஏற்பதில் காலதாமதம் கூடாது': சென்னை போலீஸ் கமிஷனர்

சென்னை : ''பொது மக்களிடம் புகார் பெற்று, ரசீது வழங்குவதில் காலதாமதம் செய்யக் கூடாது,'' என, போலீசாருக்கு, சென்னை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டுள்ளார்.

சென்னையில், 135 காவல் நிலையங்களில், சட்டம் - ஒழுங்கு மற்றும் குற்றப் பிரிவு செயல்படுகிறது. அத்துடன், போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், மத்திய குற்றப் பிரிவு செயல்படுகிறது.இவற்றில், வங்கி மோசடி தடுப்பு பிரிவு, சைபர் கிரைம், வேலைவாய்ப்பு மோசடி தடுப்பு, நில அபகரிப்பு தடுப்பு என, பல்வேறு பிரிவுகள் உள்ளன.

இதற்கு முன், காவல் நிலையங்களில் நேரடியாக பொதுமக்கள் புகார் அளிப்பர். அதேபோல, கமிஷனர் அலுவலகத்தில், திங்கள் முதல் வெள்ளி வரை, புகார் அளிப்பர்.இப்புகார்கள் மீது நடவடிக்கை எடுக்க, சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். 50 லட்சம் ரூபாய்க்கும் மேற்பட்ட மோசடி தொடர்பான புகார்கள், மத்திய குற்றப் பிரிவு போலீசாரின் விசாரணைக்கு பரிந்துரை செய்யப்படும்.

தொற்று பரவல் காரணமாக, 'வாட்ஸ் ஆப் கால்' வாயிலாக, கமிஷனர் மற்றும் துணை கமிஷனர்களிடம், பொது மக்கள் புகார் அளிக்கும் வசதி அறிமுகம் செய்யப்பட்டு, நடைமுறையில் உள்ளது.தற்போது, ஊரடங்கு தளர்வு காரணமாக, காவல் நிலையங்களில் நேரடியாக பொது மக்கள் புகார் அளித்து வருகின்றனர்.

இப்படி, கமிஷனர், துணை கமிஷனர்கள் மற்றும் காவல் நிலையங்களில் அளிக்கப்படும் புகார்களை ஏற்பதில் காலதாமதம் கூடாது; அவர்களுக்கு உடனடியாக, சி.எஸ்.ஆர்., எனப்படும், சமூக பதிவேடு ரசீது தர வேண்டும் என, போலீசாருக்கு, சென்னை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து, அவர் கூறியதாவது:பொதுமக்களின் பிரச்னைகளை, போலீசார் முழுமையாக உள்வாங்கினாலே, பாதி பிரச்னைக்கு தீர்வு கண்டுவிடலாம்.மக்களிடம் இருந்து, புகார் மனு பெற்று, அவர்களுக்கு ரசீது வழங்குவதில், எவ்வித காலதாமதமும் கூடாது என, உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக, போலீசாரின் நடவடிக்கைகள் கண்காணிக்கப்படுகின்றன.இவ்வாறு, மகேஷ்குமார் அகர்வால் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X