பொது செய்தி

தமிழ்நாடு

நிவாரணம் வழங்கல் விழா; அ.தி.மு.க., பிரமுகர்கள் அலட்சியம்

Added : செப் 13, 2020
Share
Advertisement
 நிவாரணம் வழங்கல் விழா; அ.தி.மு.க., பிரமுகர்கள் அலட்சியம்

மணலி : மணலியில், அ.தி.மு.க., சார்பில் நடந்த நிவாரணம் வழங்கல் விழாவில், மாவட்ட செயலர், பகுதி செயலர் உள்ளிட்ட, அ.தி.மு.க.,வினர், கொரோனா தடுப்பு நடவடிக்கை பின்பற்றாதது, அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சென்னை, மணலி, 20வது வட்டம் அ.தி.மு.க., சார்பில், 700 பேருக்கு நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சி, நேற்று காலை நடந்தது. இதில், அ.தி.மு.க., கிழக்கு மாவட்ட செயலர் மூர்த்தி, பகுதி செயலர் கிருஷ்ணன் உள்ளிட்ட, பலர் பங்கேற்றனர்.நிவாரணம் பெறுவோர் முக கவசம், சமூக இடைவெளியை பின்பற்றி, பொருட்களை வாங்கிச் சென்றனர்.

பொருட்களை வினியோகித்த, மாவட்ட செயலர், பகுதி செயலர், முன்னாள் எம்.எல்.ஏ., உள்ளிட்ட, அ.தி.மு.க.,வினர் பெரும்பாலானோர், முக கவசம் அணியாமல் பங்கேற்றது, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.மேலும், 30க்கும் மேற்பட்ட, அ.தி.மு.க.,வினர், போட்டோவிற்கு போஸ் கொடுக்கும் ஆர்வத்தில், சமூக இடைவெளியின்றி, மாவட்ட செயலரை, சூழ்ந்தபடி கூட்டமாக நின்றனர்.

தமிழக அரசு, தொற்று தடுப்பு நடவடிக்கைகளில், தீவிரம் காட்டி வரும் வேளையில், அ.தி.மு.க., மாவட்ட செயலர், பகுதி செயலர் உள்ளிட்டோர், முக கவசம் அணியாமல் அலட்சியமாக, பொது நிகழ்ச்சியில் பங்கேற்ற சம்பவம், தவறான முன்னுதாரணம் என, சமூக ஆர்வலர்கள் அதிருப்தி தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X