பொது செய்தி

தமிழ்நாடு

'முழு கவச பாதுகாப்பு உடைகளை பயன்படுத்த வேண்டும்'

Added : செப் 13, 2020
Share
Advertisement

தாம்பரம் : ''டாக்டர்கள், மருத்துவ பணியாளர்கள் தேவைக்கு மட்டும், முழுகவச பாதுகாப்பு உடைகளை பயன்படுத்த வேண்டும்,'' என, மத்திய நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு நிறுவன, பொது சுகாதரத் துறை வல்லுனர், டாக்டர் வளன் கூறினார்.

சென்னை அடுத்த, தாம்பரம் சானடோரியத்தில், தேசிய சித்த மருத்துவ நிறுவனம் இயங்கி வருகிறது.இதன் சார்பில், கொரோனாவுக்கு பின் ஏற்படும் நோய் நிலைகளுக்கான, சித்த மருத்துவ சிகிச்சை முறைகள் குறித்த, இணையதள கருத்தரங்கு, சமீபத்தில் நடந்தது.

நிறுவனத்தின் இயக்குனர் மீனாகுமாரி, டில்லியில் உள்ள, மத்திய நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு நிறுவனத்தின், பொது சுகாதாரத் துறை வல்லுனர், டாக்டர் வளன் மற்றும் பலர் பங்கேற்றனர்.இதில், டாக்டர் வளன் கூறியதாவது:ஒரே இடத்தில் பலர் கூடும்போது, முக கவசம் அணியாமல் இருந்தால், காற்றின் வாயிலாக, கொரோனா வைரஸ் பரவு வாய்ப்புகள் உள்ளன.முக கவசம் அணிந்திருந்தாலும், ஒரே இடத்தில் அதிக நேரம் கூடுவதை, பொது மக்கள் தவிர்க்க வேண்டும்.

டாக்டர்கள், மருத்துவ பணியாளர்கள் தேவைக்கு மட்டும், முழுக்கவச பாதுகாப்பு உடைகளை பயன்படுத்த வேண்டும்.இதனால், தேவையற்ற மருத்துவ கழிவுகள் உருவாகுவதை தடுக்க முடியும்.கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களில், 65 வயதுக்கும் மேற்பட்டவர்கள், நுரையீரல், மூளை, இதயம் மற்றும் சிறுநீரக கோளாறுகளால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.

இவற்றை தவிர்க்க, சீரான இடைவெளியில் அவர்கள், மருத்துவ பரிசோதனைகள் செய்து கொள்வதுடன், யோகா, பிராணாயாமம், தொக்கணம், வேது பிடித்தல் உள்ளிட்ட, சித்த மருத்துவ முறைகளை பின்பற்ற வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.இக்கருத்தரங்கில், நாடு முழுதும், 10க்கும் மேற்பட்ட மாநிலங்களில் இருந்து, 'ஆயுஷ்' மருத்துவம் மற்றும் பிற துறை வல்லுனர்கள், பொதுமக்கள் பங்கேற்று, தங்களின் சந்தேகங்களை கேட்டறிந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X