சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பெண் குறித்து அவதூறு; பேக்கரி ஊழியர் சிக்கினார்

Added : செப் 13, 2020
Share
Advertisement

திருவேற்காடு : திருவேற்காடில், 'கேக்' வாங்க வந்த பெண்ணின் புகைப்படத்தை, 'பேஸ்புக்' பக்கத்தில், மொபைல் எண்ணுடன் ஆபாசமாக பதிவிட்டு, அவதுாறு பரப்பிய பேக்கரி ஊழியர் சிக்கினார்.

சென்னை அடுத்த, திருவேற்காடு, அர்ஜுனமேடு பகுதியைச் சேர்ந்த, 27 வயது இளம்பெண்ணின் புகைப்படம், அவரது மொபைல் போன் எண்ணுடன், அவதுாறு பரப்பும் வகையில், பேஸ்புக் பக்கத்தில் பதிவிடப்பட்டிருந்தது.அதனால், தனக்கு வந்த முறைகேடான அழைப்புகளால், அப்பெண் மன உளைச்சலுக்கு ஆளானார். இது குறித்து, தன் கணவரிடம் தெரிவித்தார். அவர், அம்பத்துார் துணை கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்தார்.இந்த நிலையில், பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரே, அவதுாறு பரப்பியவரை கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, அந்த நபரின் பேஸ்புக் கணக்கில், புதிய கணக்கு மூலம் தொடர்பு கொண்டு, அந்த நபரிடம், பெண் பேசுவது போல் பேசி, அவரது புகைப்படம் மற்றும் மொபைல் எண்ணை பெற்றனர்.அப்போது தான், அவர் அதே பகுதியில் உள்ள, பேக்கரியில் வேலை செய்யும் ஊழியர் வெங்கடேசன், 20, என்பது தெரிந்தது. இது குறித்து, நேற்று திருவேற்காடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.போலீசார், வெங்கடேசனை பிடித்து விசாரித்தனர்.

அப்போது, சில தினங்களுக்கு முன், அந்த பெண், தன் உறவினரின் பிறந்த நாளுக்காக, கேக் ஆர்டர் கொடுக்க, பேக்கரிக்கு சென்றிருக்கிறார்.அப்போது, அங்கிருந்த வெங்கடேசன், அவரிடம், 'கேக்கை வீட்டிற்கு கொண்டு வந்து தருகிறோம்' எனக்கூறி, அவரது மொபைல் போன் எண்ணை, வற்புறுத்தி வாங்கி இருக்கிறார்.

அதன் மூலம், அப்பெண்ணின், 'வாட்ஸ் ஆப்' முகப்பில் வைத்திருந்த, அவரது படத்தை பதிவிறக்கம் செய்து, பேஸ்புக்கில், அந்த பெண்ணின் மொபைல் எண்ணுடன் பதிவிட்டு, அவதுாறு பரப்பியது தெரிய வந்தது.திருவேற்காடு போலீசார், வெங்கடேசனிடம் இருந்து, மொபைல் போன் மற்றும் சிம் கார்டுகளை பறிமுதல் செய்தனர்; அவரிடம் மேலும் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X