சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மண்ணடி நபர் கடத்தல் விவகாரம் 'சிம் கார்டு' விற்றோர் கைது

Added : செப் 13, 2020
Share
Advertisement

காசிமேடு : மண்ணடி நபர் கடத்தல் விவகாரத்தில், ஆவணமின்றி 'சிம்' கார்டுகள் விற்பனை செய்த ஐந்து பேரை, தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

சென்னை, மண்ணடியைச் சேர்ந்த திவான் அக்பர், 45, என்பவரை, மர்ம கும்பல், 17ம் தேதி காரில் கடத்தி சென்று, 18ம் தேதி, 2 கோடி ரூபாய் பெற்று கொண்டு விடுவித்தனர்.இது குறித்து, விசாரித்த முத்தியால் பேட்டை போலீசார், கடத்தலில் தொடர்புடைய, முக்கிய குற்றவாளியான, தவுபீக்கின் மனைவி சல்மா, 30, உட்பட, ஒன்பது பேரை கைது செய்தனர்.

கடத்தல் கும்பலை பிடிக்க, வடக்கு மண்டல இணை ஆணையர் பாலகிருஷ்ணன் தலைமையில், தனிப்படைகள் அமைக்கப்பட்டன.கடத்தல் கும்பல், பல சிம் கார்டுகளை பயன்படுத்தியதால், அவர்களை பிடிப்பதில் தொய்வு ஏற்பட்டது.இதையடுத்து, காசிமேடு உதவி ஆய்வாளர் விஜய், தலைமை காவலர் முருகேசன், காவலர் விமல் அடங்கிய தனிப்படை போலீசார், ஆவணமின்றி, 'சிம் கார்டு' விற்பனையில் ஈடுபடுவோரை நோக்கி, விசாரணை துவங்கினர்.

அதன்படி, கடத்தல்காரர்கள் பயன்படுத்தி வந்த, சிம் கார்டுகளை ஆய்வு செய்ததில், ராயபுரத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரின், ஆதார் அட்டையை பயன்படுத்தி, சிம் கார்டு வாங்கியிருப்பது தெரிய வந்தது.அவரை விசாரித்ததில், சிம் கார்டு ஏதும் வாங்கவில்லை எனக் கூறவே, விற்பனை செய்த, காசிமேடு, ஜீவரத்தினம் சாலையில் உள்ள மொபைல் கடையில், தனிப்படை போலீசார் விசாரித்தனர்.

அதில், மற்றவர்களின், ஆதார் அட்டையின் நகலை பயன்படுத்தி, முறைகேடாக சிம் கார்டுகள் வாங்கி, அதை, அதிக விலைக்கு விற்று வந்தது தெரிய வந்தது.அதன்படி, முறைகேடாக சிம் கார்டுகளை விற்று வந்த, புதுவண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த, அர்ஜுன், 31, பெரம்பூரைச் சேர்ந்த பிரேம நாதன், 31, அமர் ஜெயின், 41, அசன் முகமது, 51, காசிம் நவாஸ், 34, ஆகியோரை மடக்கி பிடித்து, தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X