பொது செய்தி

தமிழ்நாடு

யானைக்கு சிகிச்சை அளிக்க வந்து சேர்ந்தாச்சு 'சுயம்பு'

Added : செப் 13, 2020
Share
Advertisement

மேட்டுப்பாளையம்:வனப்பகுதியில், காலில் காயத்துடன் சுற்றும் ஆண் யானைக்கு, சிகிச்சை அளிக்க சுயம்பு கும்கி யானை, மேட்டுப்பாளையம் வந்தது.மேட்டுப்பாளையம் வனச்சரகம், நெல்லித்துறை வனப்பகுதியில், 25 வயது மதிக்கத்தக்க, ஆண் யானை, காலில் காயத்துடன் சுற்றி வருகிறது. யானைக்கு முறையான மருத்துவ சிகிச்சை அளிக்க, வனத்துறை முடிவு செய்துள்ளது.இதற்காக, சாடிவயலில் இருந்து, சுயம்பு என்ற கும்கி யானையை, லாரியில் நேற்று மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலுக்கு கொண்டு வந்தனர். அடுத்ததாக, ஆனைமலை புலிகள் காப்பகத்தில் இருந்து, கலிம் என்ற கும்கி யானையும், இன்று கொண்டு வரப்படவுள்ளது. சிகிச்சைக்கான ஏற்பாடுகளை, மேட்டுப்பாளையம் வனச்சரக அலுவலர் செல்வராஜ் மற்றும் வனத்துறையினர் செய்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X