தெருவிளக்குகள் அவுட்டு; சுந்தராபுரத்தில் இருட்டு!

Added : செப் 13, 2020
Share
Advertisement

லைட்டு எரியல; பாதை தெரியலசுந்தராபுரம், மதுக்கரை மார்க்கெட் ரோட்டில், அன்னை இந்திரா நகர் முதல் தெரு சந்திப்பில், நீண்ட நாட்களாக மின் கம்பத்தில் விளக்கு எரிவதில்லை. அதன் அருகில் உள்ள கம்பத்திலும் விளக்கு எரிவதில்லை.- ஜெய்சிங், இந்திரா நகர்.

ரோட்டில் குழி; பயணிகள் கிலிஹோப் காலேஜ் முதல், சிங்காநல்லுார் வரை செல்லும் காமராஜர் சாலையில், தார் ரோடு ஆங்காங்கே குழியாகி உள்ளது. வாகனப் போக்குவரத்து அதிகம் உள்ள இந்த ரோடு சேதமாகி இருப்பதால், அடிக்கடி விபத்துகள் நடக்கின்றன.- முரளி, வரதராஜபுரம்.

அடிக்கடி வாகன நெருக்கடிமேட்டுப்பாளையம் ரோடு, வெள்ளக்கிணர் சந்திப்பில், ரோட்டோரத்தில் கேபிள் பதிக்க குழிதோண்டப்பட்டுள்ளது. ஆனால், கடந்த 6 மாதங்களாக இப்பணி, ஆமை வேகத்தில் மந்தமாக நடப்பதால், அப்பகுதிகளில் அடிக்கடி வாகன நெருக்கடி ஏற்படுகிறது.- ருத்ரமூர்த்தி, வெள்ளக்கிணர்.

சுவர் மறிக்குது; பீவர் மிரட்டுதுபோத்தனுார், மைல் கல் பஸ் ஸ்டாப் அருகில், ராஜவாய்க்காலை வழிமறித்து, கட்டப்பட்டுள்ள சுவரால், கழிவுநீர் அடைபட்டுள்ளது. இதனால், அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. டெங்கு, மலேரியா காய்ச்சல் பரவும் அச்சமும் ஏற்பட்டுள்ளது.- தேவராஜ், போத்தனுார்.

வழிமறிக்கும் கற்குவியல்வெள்ளலூரில் உள்ள ஆர்.என்.கே., நகரில், ரோடு போட ஜல்லி குவிக்கப்பட்டு நீண்ட நாட்களாகிறது. வழியை மறித்து இந்த கற்குவியல்கள் உள்ளதால், வீடுகளுக்கு பல தெருக்களை சுற்றி செல்லும் அவலம் உள்ளது.- சூர்யா,வெள்ளலூர்.

வெட்டியா கிடக்கு கழிப்பிடம்மாதம்பட்டி ஊராட்சியில், அம்பேத்கர் காலனி, பழனிஆண்டவர் நகர் மற்றும் ஆண்டாள் நகர் பகுதிகளில், கட்டப்பட்டுள்ள பொதுக்கழிப்பிடங்கள் போதிய பராமரிப்பின்றி, கேட்பாரற்று கிடக்கின்றன.- சரவணன், மாதம்பட்டி.

நடுரோட்டில் குப்பை தொட்டிதிருச்சி ரோட்டில், ஒண்டிப்புதுார் மாநகராட்சி பள்ளி எதிரில், ரோட்டோரத்தில் இருக்க வேண்டிய குப்பை தொட்டியை, நடுரோட்டில் வைத்துள்ளனர். இது இருவழிச்சாலையை ஒரு வழியாக மாற்றிவிட்டது.- ஜெயச்சந்திரமணி, ஒண்டிப்புதுார்.

ரோடு அடைப்பு; போதை மிதப்புஜி.வி.ரெசிடென்சி ரோட்டில், சக்தி நகரில் உள்ள மதுபான கடை ஆட்கள், மக்கள் பயன்படுத்தி வரும் மாநகராட்சி சாலையில் கயிறு கட்டி யாரும் செல்ல முடியாதவாறு அடைத்துள்ளனர். இதனை மீட்டு, மக்கள் பயன்படுத்த ஏற்பாடு செய்ய வேண்டும்.-பிரியா, சக்தி நகர்.

ரோட்டில் நீச்சல் குளம்வார்டு 42, உடையாம்பாளையம் லட்சுமி நகரில், சாலைகள் அனைத்தும் மிக மோசமாக உள்ளன. சேறும் சகதியுமாக மாறி, மழை நீர் நீச்சல் குளம் போல் தங்கியுள்ளன. இதனால், வாகன போக்குவரத்து அடிக்கடி தடைபடுகிறது.- தினேஷ்குமார், லட்சுமி நகர்.

கால் சறுக்குது;வண்டி வழுக்குதுவிளாங்குறிச்சி ரோடு, செந்தில்வேலன் நகரில், இதுவரை தார் ரோடு போடப்படவில்லை. இதனால், சமீபத்திய மழைக்கு மண் பாதைகள் சகதியாக மாறி, மக்கள் நடக்க சிரமப்படுகின்றனர்.-சபீதா தர்ஷன், விளாங்குறிச்சி

மரத்தடி குளம்; வடிந்தால் நலம்பொள்ளாச்சி ரோடு, மலுமிச்சம்பட்டி, இந்திராநகர், 40 அடி சாலையில் சாக்கடை நீர் தேங்கி, போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. நோய்த்தொற்று பரவும் முன், சுத்தம் செய்தால் நல்லது.- அங்கயற்கண்ணன், இந்திரா நகர்.

காத்தடிச்சா ஆடுது கம்பம்நல்லாம்பாளையம், ரங்கா லே-அவுட்-1 ல், மின் கம்பம் காரை உதிர்ந்து, கம்பிகள் துருப்பிடித்து உள்ளது. பலமிழந்து காணப்படும் இந்த மின் கம்பம், பலமான காற்றடித்தால், முறிந்து விழும் அபாயத்தில் உள்ளது.- பொன்னுசாமி, நல்லாம்பாளையம்.

சரியாக மூடாவிட்டால் சங்கடம்சாய்பாபா காலனி, என்.எஸ்.ஆர்.,ரோட்டில் பாதாள சாக்கடைக்கு தோண்டிய இடங்களை சரியாக மூடவில்லை. இதனால், மழைக்காலங்களில் சேறும் சகதியுமாக மாறி, வண்டி வாகனங்களை வாரி விடுகிறது. பலர் காயமடைந்துள்ளனர்.- ரத்தினம், என்.எஸ்.ஆர்.ரோடு.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X