சம்பவம் செய்தி

தமிழ்நாடு

செயின் பறிப்பில் ஈடுபட்ட மூவர் சிறையிலடைப்பு

Added : செப் 13, 2020
Share
Advertisement

கோவை:கோவை பெரியநாயக்கன்பாளையம், கோவில்பாளையம், அன்னுார், வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில மாதங்களாக செயின்பறிப்பு, திருட்டு, கொள்ளை சம்பவங்கள் நடந்தன.புகாரின் பேரில், போலீசார் விசாரித்து வந்தனர். குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.இந்நிலையில், நேற்று முன்தினம் தொடர் திருட்டு, செயின் பறிப்பில் ஈடுபட்ட மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர்கள், சூலுார் வாகராயம்பாளையத்தை சேர்ந்த சரண், 21, சுரேஷ், 29 பீளமேடுபுதுாரை சேர்ந்த நிதீஷ்குமார், 20 எனத் தெரிந்தது. இவர்களிடம் இருந்து, 36 சவரன் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. மூவரையும் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X