பொது செய்தி

தமிழ்நாடு

அன்னுார் மக்களின் எதிர்பார்ப்பு; சட்டசபையில் வருமா அறிவிப்பு

Added : செப் 13, 2020
Share
Advertisement

அன்னூர்:அன்னூர் மக்களின் நீண்ட நாள் கோரிக்கைகளுக்கு, இன்று துவங்கும் சட்டசபை கூட்டத் தொடரில் அறிவிப்பு வெளியாகுமா என, மக்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.அவிநாசி தொகுதியில் உள்ள அன்னூர் ஒன்றியத்தில், ஏராளமான கோரிக்கைகள் பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ளன. அன்னூர் ஒன்றியத்தை உள்ளடக்கிய அவிநாசி தொகுதியில் வெற்றி பெற்ற தனபால், சபாநாயகராக உள்ளார்.அன்னூர் மக்களின் நீண்ட நாள் கோரிக்கை குறித்த அறிவிப்பு, இன்று துவங்கும் சட்டசபை கூட்டத்தொடரில் வெளியாகுமா என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.இதுகுறித்து, அன்னூர் மக்கள் கூறியதாவது :அன்னூரை தலைமையிடமாக கொண்டு, 2012ல் புதிய தாலுகா உருவானது. இதையடுத்து, அன்னூர் அரசு மருத்துவமனை இரண்டாண்டுகளுக்கு முன்பு தாலுக்கா மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டது. ஆனால் டாக்டர்கள், படுக்கைகள் போதாது. 100 படுக்கைகள் கொண்டதாக மேம்படுத்த வேண்டும்.அன்னூர் கிளை நூலகத்தை, 12 மணி நேரம் செயல்படும் தாலுகா நூலகமாக தரம் உயர்த்த வேண்டும். அன்னூர் மக்கள் சிவில் வழக்குகளுக்கு கோவைக்கும், குற்ற வழக்குகளுக்கு மேட்டுப்பாளையமும் செல்கின்றனர். அன்னூரில் கோர்ட் அமைக்க வேண்டும்.அன்னூர் ஒன்றியத்தில், 21 ஊராட்சிகளுக்கு கூட்டு குடிநீர் திட்டம் நிறைவேற்ற வேண்டும்.செல்லப்பம்பாளையம், பிள்ளையப்பம் பாளையம் நடுநிலைப்பள்ளிகளை உயர்நிலைப் பள்ளியாகவும், பொன்னே கவுண்டன்புதூர் அரசு உயர்நிலைப்பள்ளியை மேல்நிலைப்பள்ளியாகவும், தரம் உயர்த்த வேண்டும்.அன்னூர் நகரில் போக்குவரத்து நெரிசலை தீர்க்க, கிழக்குப் பகுதியில் புறவழிச்சாலை அமைக்கும் பணி, ஒன்றரை ஆண்டாக முடங்கிக் கிடக்கிறது. இந்த கோரிக்கைகளை நிறைவேற்ற, சட்டசபை கூட்டத்தொடரில் அறிவிப்பு வெளியிட வேண்டும்.இவ்வாறு, அன்னூர் மக்கள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X