பிராமணர் சங்கம் சார்பில் மாணவர்களுக்கு கல்வி உதவி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பிராமணர் சங்கம் சார்பில் மாணவர்களுக்கு கல்வி உதவி

Added : செப் 13, 2020
Share

வடவள்ளி:வடவள்ளியில், தமிழ்நாடு பிராமணர் சங்கம் சார்பில், மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.தமிழ்நாடு பிராமணர் சங்கத்தின் வடவள்ளி கிளையின், அறக்கட்டளையான ஞானம் பவுண்டேஷன் சார்பில், மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி, தாம்ப்ராஸ் ஹாலில் நேற்று நடந்தது. பள்ளி, கல்லூரிகளை சேர்ந்த, 20 மாணவ, மாணவிகளுக்கு, கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், மாநில பொதுச்செயலாளர் சங்கரன், கிளை ஆலோசகர் கோவிந்தராவ், கிளை பொதுச்செயலாளர் பாண்டுரங்கன், இளைஞரணி செயலாளர் கண்ணன், செயற்குழு உறுப்பினர் சூரியநாராயணபிரகாஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X