பூங்காவுக்குள் விளையாட்டு மைதானமா :கொதித்தெழுந்த மீனாட்சி நகர் மக்கள்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பூங்காவுக்குள் விளையாட்டு மைதானமா :கொதித்தெழுந்த மீனாட்சி நகர் மக்கள்

Added : செப் 13, 2020
Share

கோவை:கணபதி, மீனாட்சி நகர் பகுதியில் உள்ள சிறுவர் பூங்காவுக்குள் விளையாட்டு மைதானம் அமைப்பதற்கு, அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.கோவை, 47வது வார்டு, கணபதியில் மீனாட்சி நகர் உள்ளது. இங்குள்ள, 'ரிசர்வ் சைட்'டில் பூங்கா அமைக்கும் பணி, துரிதகதியில் நடந்து வருகிறது.அருகாமையில் உள்ள பகுதியை சேர்ந்த சிலர், இங்கு பேட்மிட்டன் விளையாடுகின்றனர். இவர்களுக்காக, நடைபாதை அகலத்தை சுருக்கி, மைதானம் அமைக்கும் முயற்சி நடக்கிறது.நடைபயிற்சி செல்வோர் பாதிக்கப்படுவர் என்பதால், அப்பகுதி மக்கள் கொந்தளிப்பில் இருக்கின்றனர். விளையாட்டு மைதானம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, எம்.எல்.ஏ., அருண்குமாரை, மக்கள் சந்தித்து, மனு கொடுத்துள்ளனர்.அதில், 'பூங்கா வளாகத்துக்குள், 80 அடி நீளம், 5 அடி அகலத்துக்கு நடைபாதை அமைக்க வேண்டும். மைதானம் அமைப்பதற்காக, 2.5 அடி அகலத்துக்கே நடைபாதை ஏற்படுத்தப்படுகிறது. இது, நடைபயிற்சி மேற்கொள்வோரை பாதிக்கும்.பூங்கா உருவாக்குவதற்கு முன், இப்பகுதியில் சிலர் விளையாடிக் கொண்டிருந்தனர். அவர்களால் மற்றவர்களுக்கு இடையூறு ஏற்பட்டது. மீண்டும் விளையாட அனுமதித்தால், மக்களிடம் அதிருப்தியே ஏற்படும்' என தெரிவித்துள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X