பொது செய்தி

தமிழ்நாடு

அரிமா சங்கம் சார்பில் ரூ.5 லட்சத்தில் பள்ளி கட்டடம்

Added : செப் 13, 2020
Share
Advertisement

திருவொற்றியூர் : மாநகராட்சி அரசு பள்ளிக்கு, 'அரிமா சங்கம்' சார்பில், 5 லட்சம் ரூபாய் மதிப்பில், சமையலறை கட்டடம் கட்டிக் கொடுக்கப்பட்டது.

சென்னை, எர்ணாவூர், சுனாமி குடியிருப்பில், மாநகராட்சி நடுநிலைப் பள்ளி செயல்படுகிறது. இங்கு, 400க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் படிக்கின்றனர்.ஒட்டுமொத்தமாக, எட்டு வகுப்பறைகள் மட்டுமே இங்கு உள்ளன. சமையலறை, நுாலகம், கணினி அறை, ஆய்வகம் போன்றவற்றிற்கு, கட்டட வசதி ஏதுமில்லை.

மாணவர்களுக்கான, மதிய உணவு, திறந்தவெளியில் சமைக்கப்பட்டு வந்தது. இது குறித்து அறிந்த, அரிமா சங்கம், சமையலறை மற்றும் உணவு பொருட்கள் இருப்பு வைக்கும் அறை கட்டிக் கொடுக்க முன்வந்தது.அதன்படி, 5 லட்ச ரூபாய் செலவில், புதிய கட்டடம் கட்டப்பட்டு, நேற்று காலை, திறப்பு விழா நடந்தது.

இதில், சமூக ஆர்வலர் ஜி.வரதராஜன் பங்கேற்று, கட்டடத்தை திறந்து வைத்தார்.விழாவில், சர்வதேச அரிமா சங்க கல்வி உதவி திட்டத்திற்கு, முன்னாள் எம்.எல்.ஏ., குப்பன், ஜி.வரதராஜன், துரைராஜ், ரங்கநாதன், மதியழகன், டேவிட்ராஜ், சங்கர் ராஜ், சீனிவாசன் உள்ளிட்டோர், தலா, 1 லட்சம் ரூபாயும், இளங்கோவன் என்பவர், 50 ஆயிரம் ரூபாய் நிதியும் வழங்கினர்.

மொத்த தொகையான, 8.50 லட்ச ரூபாய்க்கான காசோலையை, அரிமா சங்க நிர்வாகி ராஜபாண்டியனிடம் வழங்கினர். புதிய கட்டடம் கட்டி தந்த, அரிமா சங்க நிர்வாகிகளுக்கு, பள்ளி தலைமை ஆசிரியை சாருலதா நன்றி தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X