பொது செய்தி

தமிழ்நாடு

செய்தி சில வரிகளில்...,,

Added : செப் 13, 2020
Share
Advertisement

தீ விபத்தில் மூதாட்டி பலி

புழல்: புழல், கன்னடபாளையம், இந்திரா நகரில் வசித்தவர் நர்மதா, 60. இவர், நேற்று முன்தினம் காலை, சுவாமி கும்பிட, அங்குள்ள விளக்கை ஏற்றினார். அப்போது, எதிர்பாராதவிதமாக, அவரது சேலையில் தீ பிடித்தது. அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, நேற்று முன்தினம் இரவு, அவர் உயிரிழந்தார். புழல் போலீசார் விசாரிக்கின்றனர்.

லாட்டரி விற்ற இருவர் கைது

சைதாப்பேட்டை: கேரள லாட்டரி சீட்டுகள், சைதாப்பேட்டையில் விற்கப்படுவதாக, அடையாறு காவல் துணை ஆணையருக்கு புகார்கள் சென்றன.விசாரித்த சைதாப்பேட்டை போலீசார், நேற்று, சைதாப்பேட்டை, சுப்பிரமணிய கோவில் தெருவில், லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட, விஷ்ணு, 24, மணிகண்டன், 20, ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, 1.50 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

'பேட்டரி' திருடிய இருவர் சிக்கினர்

தரமணி: தரமணி, நேரு நகரைச் சேர்ந்தவர் சீனு, 30. லோடு ஆட்டோ வைத்துள்ளார். நேற்று முன்தினம், வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த, இவரது வாகனத்தில் இருந்து, பேட்டரி திருடப்பட்டது. இதுகுறித்து, தரமணி போலீசார் விசாரித்தனர்.இதில், பெருங்குடி, கல்லுக்குட்டையைச் சேர்ந்த குமார், 20, சாமுவேல், 20, எனபவர் திருடியது தெரிய வந்தது. இருவரையும் கைது செய்த போலீசார், பேட்டரிகளை பறிமுதல் செய்தனர்.

கோவில் உண்டியலை உடைத்து திருட்டு

மணலி: மணலி, எஸ்.ஆர்.எப்., அருகே, கற்பக விநாயகர் கோவில் உள்ளது. கோவில் பூசாரி செந்தில்வேல், நேற்று முன்தினம் இரவு, பூஜைகள் முடித்து, கோவிலை மூடி சென்றார். நேற்று காலை, கோவில் திறக்கப்பட்டபோது, உண்டியல் உடைக்கப்பட்டு, காணிக்கை பணம் திருடு போனது தெரிய வந்தது.அதில், 5,000 ரூபாய் வரை, திருடு போயிருக்க லாம் என தெரிகிறது. இது தொடர்பாக, மணலி போலீசார் விசாரிக்கின்றனர். சில வாரங்களுக்கு முன், மணலி, கன்னியம்மன் பேட்டை, மணலி புதுநகர் உள்ளிட்ட இடங்களில், நான்கு கோவில்களில், மர்ம நபர்கள் கைவரிசை காட்டியது குறிப்பிடத்தக்கது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X