பொது செய்தி

தமிழ்நாடு

ஆன்லைனில் இறுதி 'செமஸ்டர்' தேர்வு வரும் 16ல் நடக்கிறது மாதிரி தேர்வு

Added : செப் 13, 2020
Share
Advertisement

கோவை:ஊரடங்கு காரணமாக பட்டப்படிப்பு இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும், இறுதி செமஸ்டர் தேர்வுகள், ஆன்லைனில் நடத்தப்படவுள்ளன.கோவை, பாரதியார் பல்கலை தனது உறுப்பு கல்லுாரிகளிலும், தன்னாட்சி பெற்ற கல்லுாரிகளிலும், ஆன்லைன் முறையில், வரும் 21ம் தேதியில் இருந்து, 30ம் தேதிக்குள் தேர்வுகளை நடத்தி முடிக்க, அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.செப்.,16ல் மாதிரி தேர்வுஇத்தேர்வை எழுத, பாரதியார் பல்கலை மாணவர்களுக்கான, பிரத்யேக ஆன்லைன் போர்ட்டலை உருவாக்கியுள்ளது. இந்த ஆன்லைன் தேர்வு தொடர்பான, சோதனை தேர்வு வரும், 16ம் தேதி நடக்க உள்ளது. ஆன்லைன் இறுதி செமஸ்டர் தேர்வுகள், பொதுவாக நடத்தப்படும் மூன்று மணி நேரத்தில் இருந்து, இரண்டு மணி நேரமாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.சரியான விடையை தேர்வு செய்தல் என்ற அடிப்படையிலும், விளக்க வகை கேள்விகளை அமைக்கவும், முடிவு செய்யப்பட்டுள்ளது.லேப்டாப், டெஸ்க்டாப், ஸ்மார்ட்போன், இணையம், கேமரா மற்றும் மைக்ரோபோன் வசதி கொண்ட டேப்லெட்டுகள் போன்ற சாதனங்களை பயன்படுத்தி, மாணவர்கள் வீட்டில் இருந்தே தேர்வு எழுதலாம்.சந்தேகம் இருக்கும் மாணவர்கள், தங்கள் கல்லுாரி முதல்வர்கள், துறை தலைவர்கள் மற்றும் பாரதியார் பல்கலை இணையதளத்தை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.வரும், 16ம் தேதி நடக்க உள்ள மாதிரி தேர்வின் முடிவில், சந்தேகங்களுக்கான முழு தகவல்களும் மாணவர்களுக்கு கிடைக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X