பொது செய்தி

தமிழ்நாடு

மானியத்துடன் கடன் வேண்டுமா: 'தாட்கோ'வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

Added : செப் 13, 2020
Share
Advertisement

கோவை:'தாட்கோ' வாயிலாக மானியத்துடன் வங்கி கடன் பெற விரும்புவோர், ஆன்-லைன் முறையில் விண்ணப்பிக்கலாம்.தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழக (தாட்கோ) மேலாளர் செல்வன் இது குறித்து கூறியுள்ளதாவது:பட்டியலினம் மற்றும் பழங்குடியின வகுப்பை சேர்ந்தவர்கள் தொழில்புரிய, மானியத்துடன் வங்கி கடன் வழங்கப்படுகிறது. வங்கிகள் வழங்கும் கடனுக்கு மானியம் வழங்கப்படும்.இந்து - பட்டியலினத்தை சேர்ந்தவர்கள், application.tahdco.com என்ற இணையதள முகவரியிலும், பழங்குடியினராக இருப்பின், fast.tahdco.com என்ற இணையதள முகவரியிலும் விண்ணப்பிக்க வேண்டும்.
தொழில் செய்வதற்கான திட்ட அறிக்கையுடன் நிரந்தர ஜாதி சான்று, இருப்பிட சான்று, வருமான சான்று, ஆதார் அட்டை நகல் உள்ளிட்டவை இணைக்க வேண்டும்.மாடு வாங்குவதாக இருப்பின், பால் கொள்முதல் செய்து கொள்வதாக, அருகில் உள்ள சொசைட்டியில் இருந்து கடிதம் பெற்று, இணைக்க வேண்டும்.இணையதளம் வழியாக விண்ணப்பித்தால் மட்டுமே, தாட்கோ மூலம் நேர்காணல் நடத்தப்படும். ஆதிதிராவிடர் நலத்துறையை சேர்ந்தவர்களுக்கு, லட்சத்துக்கு ரூ.30 ஆயிரம், பழங்குடியினராக இருப்பின், ரூ.50 ஆயிரம் மானியம் வழங்கப்படும்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X