பொது செய்தி

தமிழ்நாடு

எங்கு, எப்போது, எவ்வளவு, என்ன உணவு

Added : செப் 13, 2020
Share
Advertisement

''நாம் சாப்பிடும் உணவில் பிரச்னையில்லை. சாப்பிடும் முறையிலும், வாழ்க்கை முறையிலும் தான் நிறைய பிரச்னைகள் உள்ளன. எந்த நேரத்தில் எதை சாப்பிட வேண்டும் என்பதில் ஒழுங்கு இல்லை. ஓய்வும், உறக்கமும் முறையாக இருப்பதில்லை. இதனால்தான் நோய்கள் வருகின்றன,'' என்கிறார் கோவை அரசு மருத்துவமனை டாக்டர் பாலாஜி.மழை மற்றும் பனிக்காலத்தில் என்ன மாதிரியான உணவு சாப்பிடலாம்?பொதுவாக குளிர் காலம் என்றால் சளி, இருமல், காய்ச்சல் பிரச்னைகள் வரும். அதனால் எப்போதும் போல், எல்லாம் சாப்பிட கூடாது. குறிப்பாக, இந்த வைரஸ் தொற்று காலத்தில் சளி, இருமல் வந்தாலே பயம் வந்து விடும். அதனால் ஐஸ்கிரீம், சாக்லெட், பிரிஜ்ஜில் வைத்த தயிர், கோல்டு மில்க் உள்ளிட்டவற்றை முற்றிலும் தவிர்க்க வேண்டும். சமைத்த உணவை பிரிஜ்ஜில் வைத்து சாப்பிட வேண்டாம். பழங்கள், காய்கறியை வைப்பதில் பிரச்னையில்லை.சர்க்கரை நோயாளிகளால், திட்டமிட்டு சாப்பிட முடிவதில்லையே...?தண்ணீர், கீரையை தவிர, மற்ற அனைத்து உணவிலும் சர்க்கரை சத்து உள்ளது. சர்க்கரை இருப்பவர்கள் நார்ச்சத்துள்ள உணவை சாப்பிடலாம். எளிதில் ஜீரணம் ஆகும் உணவு சாப்பிட கூடாது. உதாரணமாக, கம்பங்கூழ் குடித்தால் சீக்கிரம் ஜீரணம் ஆகிவிடும். அதே கம்பங்கஞ்சியாக சாப்பிட்டால், ஜீரணம் ஆக தாமதமாகும். அதனால் சர்க்கரை இருப்பவர்கள், முழு தானிய உணவு சாப்பிட்டால் அடிக்கடி பசிக்காது. பழம் சாப்பிடலாம் என, டாக்டர் கூறி இருந்தால் பழமாக சாப்பிடலாம்; ஜூஸ் கூடாது.எண்ணெய் பயன்பாடு குழப்பமாக உள்ளது. எந்த எண்ணெய் உடலுக்கு நல்லது?ஆலிவ் ஆயில் இங்கு கிடைப்பதில்லை. அதை தவிர்க்க வேண்டும். கேரளாவில் தேங்காய் அதிகம் கிடைக்கிறது. ஆகவே, அங்கு தேங்காய் எண்ணெய் அதிகம் பயன்படுத்துகின்றனர். அதில் நல்ல கொழுப்பு உள்ளது. அதை சாப்பிடுவதால் உடலுக்கு பிரச்னை வராது. நெய், வெண்ணெய் சாப்பிடலாம். அதில் ஒமேகா, 3 பேட்டி ஆசிட் உள்ளது. அது மூளையின் செயல்பாடுகளுக்கு நல்லது. எதுவாக இருந்தாலும், அளவாக சாப்பிட்டால் பாதிப்பு இல்லை. கொழுப்பு பற்றிய பயம் தேவையில்லை. கொழுப்பும் உடலுக்கு தேவையானதுதான்.அல்சர் தொல்லை இருப்பவர்கள் என்ன உணவு சாப்பிடலாம்?குடலில் ஏற்படும் புண் தான் அல்சர். நாம் சாப்பிடும் உணவு பொருட்களை ஜீரணம் செய்ய அமிலம் சுரக்கிறது. அது வயிற்றில் உள்ள புண்களில் படும் போது எரிச்சல், வலி ஏற்படுகிறது. மன அழுத்தம் அதிகமானால், அமிலம் அதிகம் சுரந்து புண் அதிகமாகும். காரம், புளிப்பு உள்ள உணவு தவிர்த்து, நேரத்துக்கு சாப்பிட்டால் அல்சர் தொல்லை வராது. மது, புகை எப்போதும் கூடாது.எந்த மாதிரி உணவு முறையை பின்பற்றினால் பிரச்னை வராது?நாம் சாப்பிடும் உணவில் பிரச்னையில்லை. சாப்பிடும் முறையிலும், வாழ்க்கை முறையிலும் தான் நிறைய பிரச்னைகள் உள்ளன. எந்த நேரத்தில் எதை சாப்பிட வேண்டும், எவ்வளவு சாப்பிட என்பதில் ஒழுங்கு இல்லை. ஓய்வும், உறக்கமும் முறையாக இருப்பதில்லை. இதனால்தான் நோய்கள் வருகின்றன.வேலை செய்யும் நேரத்தில் சரியாக சாப்பிடாமல், ஓய்வாக இருக்கும் போது வயிறு நிறைய சாப்பிடுகின்றனர். இதனால், வயிற்றில் அமிலம் சுரக்கும். வாயு தொல்லை அதிகமாகும். உடல் எடை கூடும். பிறகு பி.பி., சர்க்கரை எல்லாம் வந்து விடும். உழைப்பு, ஓய்வுக்கு ஏற்பட சரியான நேரத்தில் உணவும், உறக்கமும் இருக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X