பொது செய்தி

தமிழ்நாடு

ராமேஸ்வரம் கோயிலில் குவிந்த பக்தர்கள்

Added : செப் 13, 2020
Share
Advertisement
 ராமேஸ்வரம் கோயிலில் குவிந்த பக்தர்கள்

ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் நேற்று ஏராளமானபக்தர்கள் தரிசனம் செய்தனர்.161 நாட்களுக்கு பின் செப்.,1 முதல் தமிழகத்தில் முக்கிய கோயில்கள் திறக்கப்பட்டது.

அன்று முதல் ராமேஸ்வரம் கோயிலில் தினமும் ஏராளமான வெளியூர் பக்தர்கள், அக்னி தீர்த்த கடலில் நீராடிய பின், கோயிலுக்குள் தரிசனம் செய்தனர்.22 தீர்த்தங்களில் நீராட அரசு தடை விதித்த நிலையிலும், பக்தர்கள் வருகை அதிகரித்தது. விடுமுறை நாளான நேற்று தமிழகத்தின் பல பகுதியில் இருந்து 7 ஆயிரம் பக்தர்கள் ராமேஸ்வரம் கோயிலுக்கு வந்தனர்.பக்தர்கள் முகக்கவசம் அணிந்து கோயில் கிழக்கு ரதவீதியில் நீண்ட வரிசையில் காத்திருந்து, தரிசனம் செய்தனர்.

பக்தர்கள் கூட்ட நெரிசலை தவிர்க்க நேற்று சமூக விலகல், பாதுகாப்பு அம்சத்துடன் பக்தர்கள் தரிசனத்திற்கு அனு மதித்தனர். இனிவரும் நாளில் பக்தர்கள் கூட்டம் அதிகரிக்கும் என்பதால், முன்ஏற்பாடுகளை செய்து உள்ளதாக கோயில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X