சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஒரே விவசாயிக்கு அதிகளவு உரம் விற்றால் உரிமம் ரத்து

Added : செப் 13, 2020
Share
Advertisement

ராமநாதபுரம் : ஒரு குறிப்பிட்ட விவசாயி பெயரில் அதிக உரம் விற்றது கண்டறியப்பட்டால் உரிமம் ரத்து செய்யப்படும், என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் சம்பா பருவ நெல் விதைப்பு பணி துவங்கியுள்ளது. இதுவரை 238.61 மி.மீ., மழை பெய்த நிலையில் 10 ஆயிரம் ஏக்கரில் நெல் விதைப்பு செய்யப்பட்டுள்ளது. தற்போது அடியுரமாக இடுவதற்கான யூரியா, டி.ஏ.பி., உரங்கள் தேவையான அளவு இருப்பு வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.உரங்களை அரசு நிர்ணயித்த அதிகபட்ச விலைக்கு மிகாமல் விற்க வேண்டும். உரவிலை, இருப்பு விவரப்பட்டியல் கடை முன் விவசாயிகள் பார்வையில் படுமாறு எழுதி வைக்க வேண்டும்.

பிஓஎஸ் இயந்திரம் மூலம் மட்டுமே விற்க வேண்டும்.ஒரே நபருக்கு அதிக உரம் வழங்கக் கூடாது. அப்படி விற்றது கண்டறியப்பட்டால் உர உரிமம் ரத்து செய்யப்படும். விவசாயிகள் அல்லாதவர்களுக்கு விற்பனை செய்யக்கூடாது. விவசாயிகள் உரம் வாங்கும் போது ஆதார் கார்டை கொண்டு செல்ல வேண்டும், என மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் கே.குணபாலன் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X