சிறப்பு பகுதிகள்

சொல்கிறார்கள்

விடாமுயற்சி வெற்றி தந்தது

Updated : செப் 15, 2020 | Added : செப் 13, 2020
Share
Advertisement
சொல்கிறார்கள்

விடாமுயற்சியுடன் படித்து, ஐ.ஏ.எஸ்., தேர்வில் வெற்றி பெற்றுள்ள, தமிழகத்தை சேர்ந்த பல பெண்களில், தங்கள் வெற்றிக் கதையை சொல்லும் அபிநயா:

கரூர் மாவட்டம், க.பரமத்தி அருகில் உள்ளஆதியப்பக்கவுண்டனுார் என்ற கிராமத்தைச் சேர்ந்தவள் நான்.சிவில் சர்வீசஸ் தேர்வு முடிவில் இந்திய அளவில், 559-வது இடத்தைப் பிடித்திருக்கிறேன். அப்பா சதாசிவம், அம்மா சிவகாமி, என் படிப்புச் செலவுக்காகத் தன் படிப்பை பி.காம்., உடன் நிறுத்திய அண்ணன் விவேகானந்தன்னு சாதாரண விவசாயக் குடும்பம்.

இருக்கிற கொஞ்சம் நிலமும், வானம் பார்த்த பூமிங்கிறதால, ஆடு, மாடு வளர்த்த வருமானத்தில் தான் எங்களைப் படிக்க வெச்சாங்க.கோவை வேளாண்மை பல்கலைக்கழகத்தில், பி.எஸ்சி., அக்ரி, அம்மா நகையை அடகுவைத்து கிடைத்த பணத்தோடு சென்னைக்கு போய், ஐ.ஏ.எஸ்., கோச்சிங் ஸ்கூல்ல சேர்ந்தேன்.நான்கு ஆண்டுகள் முயற்சித்தும் தோல்வி. '27 வயசாச்சு, பொண்ணுக்குக் கல்யாணம் பண்ணுங்க'னு பேச்சு ஆரம்பிச்சிடுச்சு.

டி.என்.பி.எஸ்.சி., நடத்திய குரூப் - -2 தேர்வில் வென்று, பரமக்குடி வட்டார வேளாண்மைத் துறை அதிகாரி ஆனேன். 2019-ல், ஐ.ஏ.எஸ்.,சுக்கு அடுத்த முயற்சி. இதோ, இப்போ வெற்றிக் கோட்டை தொட்டு விட்டேன்.

ஐஸ்வர்யா: சிவில் சர்வீசஸ் தேர்வில், தமிழக அளவில், 2-வது இடத்தையும், இந்திய அளவில்,47-வது இடத்தையும் பிடித்துள்ளேன். பண்ருட்டியை அடுத்த மருங்கூர் முந்திரி விவசாயி ராமநாதன், இளவரசி தம்பதியின் மகள். கடந்த, 2004-ல், 'சுனாமி' வந்தப்ப, எங்க கடலுார் மாவட்டத்தில், ஐ.ஏ.எஸ்., அதிகாரியாக இருந்த ககன்தீப் சிங் பேடியை போல, நாமளும், ஐ.ஏ.எஸ்., ஆகணும்னு ஓர் இலக்கு மனசுக்குள்ள வேரூன்றியது.

என் முயற்சிகளுக்கெல்லாம் துணையாகவும் வழிகாட்டியாகவும் இருந்தவங்க, அம்மா இளவரசி. அம்மாவுக்கு சின்ன வயசிலேயே திருமணமாகிட்டதால, அதுக்கு அப்புறம்தான் இளங்கலைப் படிப்பையே முடிச்சாங்க. நான் கல்லுாரியில், முதலாமாண்டு படிச்சுக்கிட்டு இருக்கும்போது, அவங்க, டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 - ஏ தேர்வெழுதி வெற்றி பெற்று, கல்வித் துறையில் வேலை பார்க்கிறாங்க.

அரசுத் தேர்வுக்கு தயாராவதில், என் அம்மா தான் எனக்கு ரோல்மாடல். என் வயதுத் தோழிகள் எல்லாருக்கும் திருமணமாகிடுச்சு.என்றாலும், என்னைத் திருமணத்துக்குக் கட்டாயப்படுத்தாம, 'நீ படிம்மா'னு சொன்ன எங்கப்பா, அம்மா ரெண்டு பேருக்கும், இப்போ என் வெற்றி மூலமா, நன்றி சொல்லி விட்டேன்!

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X