சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பொதுப்பணித்துறை தினக்கூலி நியமன முறைகேடு லஞ்ச ஒழிப்பு போலீஸ் விசாரிக்க வழக்கு

Added : செப் 13, 2020
Share
Advertisement

மதுரை : பொதுப்பணித்துறையில் தினக்கூலி பணியாளர்கள் நியமன முறைகேட்டை லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரிக்க தாக்கலான வழக்கை, உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ஒத்திவைத்தது.

மதுரை செல்லுார் பாண்டியராஜா உட்பட 20 பேர் தாக்கல் செய்த மனு:பொதுப்பணித்துறையில் தினக்கூலி (என்.எம்.ஆர்.,-நாமினல் மஸ்டர் ரோல்) பணியாளர்களாக 2013 ல் சேர்ந்தோம். தற்காலிகம், என்.எம்.ஆர்., ஊழியர்களுக்கு குறைந்தபட்ச சம்பளம் நிர்ணயிக்க உயர்நீதிமன்றக் கிளை 2019 ஜன.,31 ல் உத்தரவிட்டது. இதை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.பணியிலுள்ள 2406 என்.எம்.ஆர்., பணியாளர்களுக்கு மாதம் ரூ.18 ஆயிரம் குறைந்தபட்ச சம்பளம் நிர்ணயித்து பொதுப் பணித் துறை 2019 செப்.,13 ல் அரசாணை வெளியிட்டது.

பின் 3407 என்.எம்.ஆர்.,களுக்கு குறைந்தபட்ச சம்பளம் நிர்ணயித்து 2019 டிச.,6 ல் அரசாணை வெளியானது. இப்பயனாளிகள் பட்டியலில் எங்கள் பெயர்களை சேர்க்கவில்லை. எங்களுக்கு குறைந்தபட்ச சம்பளம் மறுக்கப்பட்டுள்ளது.குறைந்தபட்ச சம்பள பயனாளிகள் பட்டியலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் என்.எம்.ஆர்., ஊழியர்களாக இடம் பெற்றுள்ளனர். பொறியியல் பட்டம் பெற்றவர்கள், நிர்ணயிக்கப்பட்ட தகுதி இல்லாதவர்கள், போலிச் சான்றுகள் அடிப்படையில் பட்டியலில் சேர்க்கப் பட்டுள்ளனர். லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரிக்க உத்தரவிட வேண்டும். எங்களை தொடர்ந்து பணிபுரிய அனுமதிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டனர்.

நீதிபதி ஆர்.சுரேஷ் குமார், 'எதனடிப்படையில் தகுதியானவர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டது. மனுதாரர்களை என்.எம்.ஆர்.,களாக கருத முடியாது; ஒப்பந்ததாரர்கள் மூலம் வந்தவர்கள் என எப்படி முடிவு செய்தீர்கள்,' என கேள்வி எழுப்பினார்.அரசுத் தரப்பில், 'மனுதாரர்களின் குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றது. தள்ளுபடி செய்ய வேண்டும்,'என தெரிவிக்கப்பட்டது. நீதிபதி செப்.,22 க்கு ஒத்திவைத்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X