பொது செய்தி

தமிழ்நாடு

நல்லவேளை... முதல்வர் வர்றாரு அன்னுார் ரோட்டுல பணிகள் ஜோரு!

Added : செப் 13, 2020
Share
Advertisement

அன்னூர்:அன்னூர் வழியாக ஊட்டிக்கு முதல்வர் செல்ல உள்ளதால், அன்னூரில் மோசமான ரோடுகளுக்கு விமோசனம் கிடைத்துள்ளது.திருப்பூர் நான்காம் குடிநீர் திட்டத்திற்காக, அன்னூர் ஒன்றியத்தில் குழிதோண்டி குழாய் பதிக்கும் பணி, ஆறு மாதங்களாக நடக்கிறது. இதற்காக குழாய் பதிக்கப்பட்ட சில இடங்களில், தார்ரோடு போடாமல் மண் பாதை உள்ளது.தார் ரோடு போட்ட இடங்களில், ஒட்டியுள்ள ரோட்டை விட, அரை அடி தாழ்வாக உள்ளது. இதனால் இருசக்கர வாகனங்களில் செல்வோர் விபத்துக்குள்ளாகின்றனர். தினமும் விபத்து நடக்கிறது. இது குறித்து மாநில நெடுஞ்சாலை துறையில் பல மாதங்களாக, புகார் செய்தும் நடவடிக்கை இல்லை.கடந்த இரு நாட்களாக, அன்னூர் நகரிலும், மேட்டுப்பாளையம் ரோட்டில், பொகலூர் வரையும், குழாய் பதிக்கப்பட்ட இடங்களில், மோசமாக போடப்பட்ட தார் ரோடு, கொத்தி எடுக்கப்பட்டு, புதிதாக ரோடு போடும் பணி, இரவு பகலாக நடக்கிறது. 15ம் தேதி ரோடு போடும் பணி முழுமையாக முடிந்துவிடும்' என, அதிகாரிகள் தெரிவித்தனர்.ரோட்டோரத்தில் உள்ள புதர்கள், முள்செடிகள் அகற்றப்படுகின்றன. புளியமரங்களில் கருப்பு, வெள்ளை பெயின்ட் அடிக்கப்படுகிறது.மக்கள் பல மாதங்களாக புகார் செய்து நடவடிக்கை எடுக்காத நிலையில், முதல்வரின் வருகையால், மோசமான ரோட்டுக்கு விமோசனம் கிடைத்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X