எம்.எல்.ஏ.,க்களிடம் ஆதரவு கேட்கும் ரேஷன் பணியாளர்கள்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

எம்.எல்.ஏ.,க்களிடம் ஆதரவு கேட்கும் ரேஷன் பணியாளர்கள்

Added : செப் 13, 2020
Share

ராமநாதபுரம் : கோரிக்கைகளை சட்டசபை கூட்டத்தொடரில்பேசுமாறு எம்.எல்.ஏ.,க் களை சந்தித்து ரேஷன் பணியாளர்கள் சங்க நிர்வாகிகள் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.

கொரோனா காலத்தில் பணியாற்றும் ரேஷன் பணியாளர்களை கொரோனா மருத்துவக்குழு காப்பீடுதிட்டத்தில் சேர்க்க வேண்டும். கொரோனா தொற்றால் இறந்த திருத்தணி அன்பழகன், மதுரை கார்த்திகேயன், திண்டுக்கல் ராம்ராஜ், தேனி சின்னமனுார் சேகரன் ஆகியோர் குடும்பத்திற்கு தலா ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை தர வேண்டும்.அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் 100 சதவீதம் பொருட்கள் சரியான எடையில் வழங்க வேண்டும்.

மே, ஜூன், ஜூலை, ஆக., மாதங்களுக்கான ஊக்கத்தொகை ரூ.2500, ரூ.2000 வழங்க வேண்டும். காலியாக உள்ள விற்பனையாளர், எடையாளர் பணியிடங்களை நிரப்ப வேண்டும், உள்ளிட்ட 12 கோரிக்கைகளை வலியுறுத்தி செப்.8 முதல் 10 வரை மக்கள் சந்திப்பு இயக்கம் நடத்தப்பட்டது. அதனை தொடர்ந்து அனைத்து தொகுதி எம்.எல்.ஏ.,க்களை சந்தித்து மனு அளித்தனர். தங்கள் கோரிக்கைகள் குறித்து சட்டசபை கூட்டத் தொடரில் குரல் கொடுக்க வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X