சிறப்பு பகுதிகள்

டீ கடை பெஞ்ச்

நீலகிரியில் அனுமதியற்ற விடுதிகளுக்கு ஆப்பு!

Updated : செப் 15, 2020 | Added : செப் 13, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
 டீ கடை பெஞ்ச்

''நகர செயலர் மீது அதிருப்தியில இருக்கறவாளுக்கு, பா.ஜ., தரப்புல வலை வீசிண்டு இருக்கா ஓய்...'' என்றபடியே வந்தார், குப்பண்ணா.

''எந்தக் கட்சியிலங்க...'' எனகேட்டார், அந்தோணிசாமி.

''தாம்பரம் தொகுதியில இருக்கற செம்பாக்கம் நகர, தி.மு.க., நிர்வாகி ஒருத்தர், பல வருஷங்களா இதே பொறுப்புல இருக்கார்... வார்டு வாரியா, கட்சிக்குள்ள ரெண்டு கோஷ்டிகளை உருவாக்கி, மோத விடறார் ஓய்...

''அ.தி.மு.க., பிரமுகருடன் கூட்டணி போட்டு, நகராட்சி பணிகளை டெண்டர் எடுத்திருக்கறவாளை மிரட்டி, பணம் வசூல் பண்றார்...

''நகராட்சியில, தி.மு.க.,வுக்கு வெற்றி வாய்ப்பு இருக்கற வார்டுகள்ல, தனக்கு வேண்டாத வட்டச் செயலர்கள் பொறுப்புல இருந்தா, அந்த வார்டுகளை, ஆளுங்கட்சியினர், அதிகாரிகள் துணையோட, மகளிர் அல்லது தனி வார்டுகளா மாத்திப்பிடறார் ஓய்...

''கட்சியில மூத்த நிர்வாகிகளை கூட, ஒருமையில திட்டி அவமானப்படுத்தறார்... இவர் மேல அதிருப்தியில இருக்கறவாளுக்கு, பா.ஜ., தரப்புல வலை வீசிண்டு இருக்கா ஓய்...'' என்றார், குப்பண்ணா.'

'லோகநாதன் வராரு... டீ போடும் நாயர்...'' என, குரல் கொடுத்த அன்வர்பாயே, ''மத்திய அரசு சலுகை குடுத்தாலும், அதிகாரிகள் வசூலை நிறுத்தலை பா...'' என, அடுத்த தகவலுக்கு தாவினார்.'

'விளக்கமா சொல்லும் ஓய்...'' என்றார், குப்பண்ணா.'

'கொரோனா ஊரடங்கால, வாகனங்கள் தொடர்பான ஆவணங்கள் மற்றும் ஓட்டுனர் தொடர்பான ஆவணங்களை புதுப்பிக்க, இந்த ஆண்டு இறுதி வரை, மத்திய அரசு அவகாசம் குடுத்திருக்குது பா...

''ஆனாலும், போக்குவரத்து போலீசார், வாகனங்களை நிறுத்தி, லைசென்ஸ், பர்மிட், இன்சூரன்ஸ் உள்ளிட்ட ஆவணங்கள் புதுப்பிக்காததை சுட்டிக்காட்டி, ஆயிரக்கணக்குல அப்பாவி மக்களிடம் வசூல் பண்ணிடுறாங்க...

''விபரம் தெரிஞ்சவங்க, எதிர்த்து கேள்வி கேட்டா, ஊரடங்கு விதிகளை மீறியதா வழக்கு போட்டு, வாகனங்களை பறிமுதல் பண்ணிடுறாங்க... தமிழகத்துல பல ஊர்கள்லயும் இந்த அநியாயம் நடக்குது பா...'' என்றார், அன்வர்பாய்.

''அனுமதியில்லாத காட்டேஜ்களுக்கு ஆப்பு அடிக்க போறாவ வே...'' என்றார் அண்ணாச்சி.

''எந்த ஊருல பா...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.

''நீலகிரி மாவட்டத்துல, அனுமதி இல்லாத காட்டேஜ்கள் நிறைய இருக்கு... அந்தந்த ஏரியா போலீசாரும், உள்ளாட்சி அதிகாரிகளும் இதுக்கு உடந்தையா இருக்காவ வே...

''சமீபத்துல, கேத்தி பக்கத்துல, அனுமதி இல்லாம இயங்குன காட்டேஜ்ல, குரைக்கும் மான், மலபார் அணிலோட இறைச்சியை வனத்துறையினர் பறிமுதல் பண்ணி, அஞ்சு பேரை கைது செஞ்சாவ வே...

''இது, உள்ளூர் போலீசுக்கு தெரிஞ்சும், தெரியாத மாதிரி இருந்திருக்காவ...
இப்ப, வனத்துறையினர் மூலமா குட்டு வெளியாகிட்டதால, உயர் போலீஸ் அதிகாரிகள் முழிச்சுக்கிட்டாவ...

''மாவட்டம் முழுக்க, அனுமதி இல்லாத காட்டேஜ்கள், விடுதிகள்ல திடீர் சோதனை நடத்த, உயர் போலீஸ் அதிகாரிகள் முடிவு செஞ்சிருக்காவ வே...'' என்றார் அண்ணாச்சி.

''நல்லது நடந்தா சரிதானுங்க...'' என்றபடியே அந்தோணிசாமி கிளம்ப, மற்றவர்களும் எழுந்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
கல்யாணராமன் சு. - பெங்களூரு,இந்தியா
14-செப்-202011:35:33 IST Report Abuse
கல்யாணராமன் சு. வேற எங்கியோ கேட்டமாதிரி இருக்கே???????
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X