கொரோனா பரிசோதனையில் ரூ. 270 கோடி மோசடி

Added : செப் 13, 2020
Share
Advertisement

மும்பை : மஹாராஷ்டிராவில் கொரோனா பரிசோதனையில் ரூ. 270 கோடி மோசடி நடந்துள்ளது என அம்மாநில எதிர்க்கட்சி தலைவரான பா.ஜ. வின் பிரவீன் தரேகர் குற்றம் சாட்டியுள்ளார்.

இது குறித்து கூறிய அவர் பி.சி.ஆர். மற்றும் ஆன்டிபாடி பரிசோதனைக்கு மத்திய அரசின் எச்.எல்.எல். லைப்கேர் நிறுவனம் குறைந்த கட்டணம் விதித்தது. ஆனால் உத்தவ் தாக்கரே அரசு தனியார் ஆய்வகங்களுக்கு அனுமதி வழங்கியது. இதன் மூலம் ரூ. 270 கோடி மோசடி நடைபெற்றுள்ளது. இம்முறைகேடு குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும்.ஜூலை 7ல் மத்திய அரசு நிறுவனம் ஒரு ஆர்.டி. - பி.சி.ஆர். பரிசோனைக்கு ரூ. 1700 கட்டணமாக விதித்தது. ஆனால் தனியார் ஆய்வகங்கள் ரூ. 1900 - 2000 வசூலித்தன. ஆக. 19ல் மத்திய அரசு நிறுவனம் ரூ. 795 கட்டணமாக நிர்ணயித்தது.

அரசு - தனியார் நிறுவனம் இடையே வித்தியாசம் ரூ. 1256. தற்போது வரை தனியார் நிறுவனங்கள் 50 சதவீத சோதனைகளை (1934096) செய்துள்ளது. இதனால் ஒவ்வொரு பரிசோதனைக்கும் ரூ. 1256 கூடுதலாக மக்கள் செலவழித்துள்ளனர். இதன் மூலம் ரூ. 242.92 கோடி கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது. அதே போல மத்திய அரசு நிறுவனம் ஒரு ஆன்டிபாடி பரிசோதனைக்கு ரூ. 291ம் தனியார் நிறுவனம் ரூ. 599ம் கட்டணமாக நிர்ணயித்தன. இதன் மூலம் கூடுதலாக ரூ. 27 கோடி என மொத்தம் ரூ. 270 கோடி மோசடி நடந்துள்ளது என தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X