சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மதுரை, தேனி மையங்களில் 2796 பேர் ஆப்சென்ட்

Added : செப் 13, 2020
Share
Advertisement

மதுரை : மதுரையில் 35, தேனியில் 2 மையங்களில் நடந்த நீட் தேர்வில் 12,240 மாணவர் பங்கேற்றனர். 2796 பேர் ஆப்சென்ட் ஆகினர். மதியம் 2:00 மணிக்கு துவங்கிய தேர்வுக்கு தெர்மல் மற்றும் 'பிரிஸ்கிங்' (தடவி பார்த்து) சோதனை காலை 11:00 மணி முதலே நடந்தது.

மாணவர்கள் 50 எம்.எல்., 'சானிடைசர்' பாட்டிலுடன் வந்தனர். கையுறை, முகக்கவசம் உள்ளிட்ட நோய் தடுப்பு பொருட்கள் மையங்களில் வழங்கப்பட்டன.சமூக இடைவெளி விட்டு ஒரு அறையில் 12 பேர் மட்டும் அனுமதிக்கப்பட்டனர். மாலை 5:00 மணிக்கு தேர்வு முடிந்தது.10 நிமிடம் கூடுதலாக அனுமதிதேர்வு ஒருங்கிணைப்பாளர் ஹம்சபிரியா கூறுகையில் "எவ்வித புகார்கள் இன்றி தேர்வு முடிந்தது. 'ஹால்டிக்கெட்'டில் இந்தாண்டு இடம் பெற்ற வசதியால் மையங்களை கண்டுபிடிப்பதில் மாணவர்களுக்கு சிரமம் ஏற்படவில்லை. மதியம் 1:30 மணி வரை அனுமதிக்கப்படும்என அறிவிக்கப்பட்ட நிலையில் மதியம் 1:40 மணி வரை மாணவர்கள் அனுமதிக்கப்பட்டனர்'' என்றார்.

"எதிர்பார்க்கப்பட்டது போல் கடினமாக இல்லாமல் எளிமையான வினாக்கள் இடம் பெற்றதால் நிம்மதி அடைந்தோம்" என தேர்வு எழுதியமாணவர்கள் தெரிவித்தனர். அவர்கள் கூறியதாவது: ஸ்வேதாஸ்ரீ, மதுரை: வீட்டில் இருந்தே தேர்வுக்கு தயாரானேன். பிளஸ் 2 பகுதி எளிதாக இருந்தன. பிளஸ் 1 பகுதி இயற்பியலில் பல வினாக்கள் கடினமாக இருந்தன.கொரோனா பிரச்னையால் 'கைடு' உதவியின்றி இயற்பியல், வேதியியல் பாடங்களை படிப்பதில் சிரமமாக இருந்தது. சோதனைகள் கடுமையாக இல்லை. காலை 11:00 மணிக்கு மையத்திற்குள் சென்றதால் மதியம் சாப்பிடவில்லை.

ஆனால் 1:30 மணி வரை ஸ்நாக்ஸ் சாப்பிட அனுமதிக்கப் பட்டது.எவ்வித அசவுரியமும் தெரியவில்லை.மதுபாலா, தேனி: இயற்பியல் -45, வேதியியல் - 45, உயிரியல் (தாவரவியல், விலங்கியல்) - 90 வினாக்கள் கேட்கப்பட்டன. ஒரு வினாவிற்கு நான்கு வீதம் மொத்தம் மதிப்பெண் 720. இதில் இயற்பியலில் 45 வினாக்களில் 25 வரையே எழுத முடிந்தது. மைனஸ் மதிப்பெண் என்பதால் தெரியாத வினாக்களைஎழுதவில்லை.வேதியியல், உயிரியியல் வினாக்கள் எளிதாக இருந்தன. 500 மதிப்பெண் வரை எதிர்பார்க்கிறேன். தேர்வு விதிமுறை இப்படித்தான்இருக்கும் என மனரீதியாக தயாராக வந்ததால் கெடுபிடிகள் தெரியவில்லை.

சுஜாதா, தேனி: வேதியில், உயிரியல் பகுதி எளிதாக இருந்தன. பெரும்பாலான வினாக்கள் நேரடியாக கேட்கப்பட்டன. 158 வினாக்களுக்கு விடை அளித்துள்ளேன்.இயற்பியலில் தெரியாத வினாக்களை விட்டுவிட்டேன். அப்பகுதி கடினம் என தெரிந்து பிற இரண்டு பாடங்களில் அதிகம் கவனம் செலுத்தி படித்தேன். நினைத்தது போல் அதிக வினாக்களுக்கு விடையளிக்க முடிந்தது. அச்சப்படும் அளவிற்கு நீட் தேர்வு இல்லை.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X